IND vs SL: இந்த ஒரு வீரர்தான் இந்தியாவின் X
IND vs SL: இந்த ஒரு வீரர்தான் இந்தியாவின் X-Factor.. இலங்கைக்கு சிக்கல் காத்திருக்கிறது
காலே: இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற வேண்டும் என்றால் இந்த தொடரில் முழுமையாக இந்தியா கைப்பற்ற வேண்டும்.
இலங்கை அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. இந்த தருணத்தில் இந்திய அணி இலங்கை மண்ணில் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் போட்டி ஒன்றில் விளையாடுகிறது.
பும்ரா, அஸ்வின், விராட் கோலி, ரோகித் சர்மா, புஜாரா போன்ற ஸ்டார் வீரர்கள் இல்லாமல் இந்திய அணி இந்த தொடரில் களம் இறங்குகிறது. அந்த வகையில் இலங்கை அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த இந்திய அணி சில தனித்துவ திறமையை கொண்ட வீரர்களை களம் இறக்குகிறது.
வெளியே பெரிய அளவு அறியப்படாத சைலன்ட் கில்லர்களை தான் கிரிக்கெட்டில் எக்ஸ் ஃபேக்டர் என்று அழைப்பார்கள். அப்படி இந்திய அணியில் இருக்கும் ஒரு வீரர்தான் 24 வயதான மானவ் சுதர். தமிழக வீரர் அஸ்வினை ரோல் மாடலாக வைத்து செயல்படக்கூடிய மானவ் சுதர் ஏற்கனவே ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி 7 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.
அது மட்டும் அல்லாமல் இலங்கைக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் பந்துவீச்சில் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். பேட்டிங்கிலும் கீழ் வரிசையில் களமிறங்கி 41 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் இலங்கை போன்ற பேட்டர்களுக்கு நெருக்கடி தரக்கூடிய சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் கீழ் வரிசையில் மானவ் பேட்டிங்கில் கொஞ்சம் தாக்கு பிடித்தால் அது மிகப் பெரிய பலத்தை இந்திய அணிக்கு தரும்.
இது போன்ற ஆடுகளங்களில் ஒரு ரன் அல்லது 10 ரன்கள் கூடுதல் ஆக எடுத்தாலே அது மிகப்பெரிய சாதகமாக மாறும். ஏற்கனவே இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடிய மானவ் சுதர் ஒரே ஆட்டத்தில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இதனால் மானவ் சுதர் இலங்கைக்கு மிகப்பெரிய நெருக்கடியை தரலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றன.