📅 Sunday, 23 August 2026 IST | ஆவணி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 23, 2026 07:04 PM

IND vs SL: ரிஷப் பண்ட் காயம் என்ன ஆனது? மீண்டும் பேட்டிங் செய்ய வருவாரா? பிசிசிஐ அப்டேட்

IND vs SL: ரிஷப் பண்ட் காயம் என்ன ஆனது? மீண்டும் பேட்டிங் செய்ய வருவாரா? பிசிசிஐ அப்டேட்

IND vs SL: ரிஷப் பண்ட் காயம் என்ன ஆனது? மீண்டும் பேட்டிங் செய்ய வருவாரா? பிசிசிஐ அப்டேட்

கொழும்பு: இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், இந்திய விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆட்டத்தின் பாதியிலேயே வெளியேறினார். இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

கொழும்பில் நடைபெற்று வரும் இந்த போட்டியின் முதலாம் நாள் ஆட்டத்தின் இறுதிப் பகுதியில், இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமாராவின் பந்துவீச்சில் புல் ஷாட் ஆட முயன்றபோது ரிஷப் பந்தின் மணிக்கட்டில் பந்து பலமாகத் தாக்கியது. மைதானத்திலேயே அவருக்கு உடற்பயிற்சி நிபுணர்கள் நீண்ட நேரம் சிகிச்சை அளித்தனர்.

எனினும், அவரால் தொடர்ந்து விளையாட முடியாததால் ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் அவர் மைதானத்தை விட்டு வெளியேறினார்.இந்நிலையில், ரிஷப் பந்தின் தற்போதைய உடல்தகுதி குறித்த முக்கிய அறிவிப்பை இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் பகிர்ந்துள்ளார். கொழும்பு டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் ரிஷப் பந்த் தொடர்ந்து பேட்டிங் செய்ய தகுதியுடன் இருப்பார் என்றும், அவர் நலமாக உள்ளார் என்றும் பயிற்சியாளர் கோடக் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முக்கிய தூணாக விளங்கும் ரிஷப் பந்திற்கு ஏற்பட்ட இந்த காயம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்ற செய்தி ரசிகர்களுக்கும் இந்திய அணி நிர்வாகத்திற்கும் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. தற்போது முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் எடுத்துள்ளது.

களத்தில் சூர்யான்ஷ் ஜெயின் மற்றும் துருவ் ஜூரல் ஆகியோர் உள்ளனர். இன்னும் மானவ் சுதர் மற்றும் சிராஜ் ஆகியோர் பேட்டிங் செய்ய உள்ளனர். இவர்களுடன் இணைந்து ரிஷப் பண்டும் பேட்டிங்கில் இணைந்து ரன்கள் சேர்த்து, இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை 450 ரன்களுக்கு மேல் கொண்டு செல்ல வேண்டும். அப்போது தான் வெற்றி வாய்ப்பு இந்தியாவுக்கு பிரகாசமாக இருக்கும்.