📅 Sunday, 09 August 2026 IST | ஆடி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 08, 2026 04:33 PM

IND vs SL: ரிஷப் பண்ட், துருவ் ஜூரல் ஏமாற்றம்.. தோனி உடன் செய்த பயிற்சி வேஸ்ட்டா?

IND vs SL: ரிஷப் பண்ட், துருவ் ஜூரல் ஏமாற்றம்.. தோனி உடன் செய்த பயிற்சி வேஸ்ட்டா?

IND vs SL: ரிஷப் பண்ட், துருவ் ஜூரல் ஏமாற்றம்.. தோனி உடன் செய்த பயிற்சி வேஸ்ட்டா?

கொழும்பு: இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்காக இந்திய அணி தற்போது மூன்று நாள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கிறது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 363 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளர் செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடங்குகிறது. ஜெய்ஸ்வால் டக் அவுட் ஆகி வெளியேறினார்.

இந்த சூழலில் ராகுல் மற்றும் படிக்கல் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்டனர். இதில் படிக்கல் 103 ரன்கள் எடுத்த நிலையில் மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக ரிட்டயர் அவுட் ஆனார். மறுமுனையில் கேஎல் ராகுல் 40 ரன்கள் எடுத்த நிலையில் போல்ட் ஆனார்.

இந்த தருணத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக யார் இருக்கப் போகிறார்கள் என்ற போட்டி ரிஷப் பண்ட் மற்றும் துருவ் ஜுரல் இடையே உள்ளது. இதில் பண்டுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் பண்ட் டெஸ்ட் போட்டி மட்டுமில்லாமல் ஒருநாள் டி 20 கிரிக்கெட்டிலும் இடம் பிடிக்க போராடி வருகிறார்.

பண்ட் ஏற்கனவே ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 81 ரன்கள் எடுத்திருந்தார். இந்த சூழலில் இலங்கை டெஸ்ட் போட்டிக்காக ரிஷப் பண்ட், தோனியுடன் இணைந்து ராஞ்சியில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் பழைய மாதிரி பெரிய சதங்களை அடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் இன்று பயிற்சி ஆட்டத்தில் அவர் வெறும் 5 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு இரண்டு ரன்களில் ஆட்டம் இழந்தார். இதேபோன்று மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான துருவ் ஜூரல் ஒன்பது பந்துகளை எதிர் கொண்டு வெறும் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார்.

இருவரின் விக்கெட்டுகளையும் மெண்டிஸ் வீழ்த்தினார். ஆப் ஸ்பின்னரான ரமேஷ் மெண்டிஸ் இந்திய அணியின் பலமாய்ந்த வீரர்களான ரிஷப் பண்ட் மற்றும் துருவ் ஜூரல் விக்கெட்டை வீழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்திய வீரர்கள் இன்னும் சுழற் பந்துவீச்சை எதிர்கொள்ள தடுமாறுகிறார்கள் என்ற விமர்சனம் உறுதியாகி இருக்கிறது.