📅 Tuesday, 11 August 2026 IST | ஆடி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 10, 2026 12:04 PM

இந்திய கிரிக்கெட்டின் டாப் 5 கேப்டன்கள்.. முதலிடத்தில் தோனி.. 2வது இடத்தில் இருப்பது யார் தெரியுமா?

இந்திய கிரிக்கெட்டின் டாப் 5 கேப்டன்கள்.. முதலிடத்தில் தோனி.. 2வது இடத்தில் இருப்பது யார் தெரியுமா?

இந்திய கிரிக்கெட்டின் டாப் 5 கேப்டன்கள்.. முதலிடத்தில் தோனி.. 2வது இடத்தில் இருப்பது யார் தெரியுமா?

மும்பை: இந்திய கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் இந்திய அணியை அதிக போட்டிகளில் வழிநடத்திய முதல் ஐந்து கேப்டன்கள் யார், அவர்களின் சாதனைகள் என்ன என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

1. மகேந்திர சிங் தோனி : இந்திய கிரிக்கெட்டின் சிறந்த கேப்டனாக கருதப்படும் தோனி, 2007 முதல் 2018 வரை 332 போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தியுள்ளார். இதில் 178 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றது, 120 போட்டிகளில் தோல்வியடைந்தது. இவரது வெற்றிக்கான சதவீதம் 53.61 ஆகும். தோனி தலைமையின் கீழ் இந்தியா 2007 டி20 உலகக்கோப்பை, 2011 ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபி என 3 விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்று சாதனை படைத்தது.

2. முகமது அசாருதீன் : 1990 முதல் 1999 வரை 221 சர்வதேச போட்டிகளுக்கு அசாருதீன் கேப்டனாக இருந்துள்ளார். இதில் 104 போட்டிகளில் இந்தியாவிற்கு வெற்றியை தேடித்தந்தார். இவரது வெற்றிக்கான சதவீதம் 47.05 ஆகும். இவரது காலத்தில் உள்நாட்டில் இந்திய அணி அசுர பலத்துடன் விளங்கியது.

3. விராட் கோலி : 2013 முதல் 2022 வரை 213 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்த விராட் கோலி, 135 போட்டிகளில் இந்தியாவிற்கு வெற்றியைப் பெற்று தந்துள்ளார். இவரது வெற்றிக்கான சதவீதம் 63.38 ஆகும். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாட்டு மண்ணில் இந்தியாவுக்கு டெஸ்ட் வெற்றிகளைப் பெற்றுத் தந்து, சிறந்த டெஸ்ட் அணியை உருவாக்கினார்.

4. சவுரவ் கங்குலி : 1999 முதல் 2005 வரை 195 போட்டிகளில் இந்தியாவை வழிநடத்திய கங்குலி, 97 போட்டிகளில் வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளார். யுவராஜ், ஹர்பஜன், ஜாகீர் கான், தோனி போன்ற இளம் வீரர்களுக்கு ஆதரவளித்து புதிய இந்திய அணியை உருவாக்கினார்.

5. ரோஹித் சர்மா : 2017 முதல் 2025 வரை 142 போட்டிகளில் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா, 103 போட்டிகளில் இந்தியாவுக்கு வெற்றியைத் தேடித்தந்துள்ளார். இந்தப் பட்டியலில் உள்ள அனைத்து கேப்டன்களையும் விட ரோஹித்தின் வெற்றி சதவீதம் 72.53 என்ற அளவில் மிக அதிகமாகும். இவரது தலைமையில் இந்தியா 2024 டி20 உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்தது.