இந்தியர், அமெரிக்கர்களுக்கே மரியாதை: பாகிஸ்தான் பார்லி.,யில் எம்.பி., புலம்பல்
இஸ்லாமாபாத்: இந்தியர்கள், அமெரிக் கர் களுக்கு மட்டுமே முக்கியத் துவம் கொடுத்து பாகிஸ்தா னியர்களை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு அவமதித்ததாக, பாகிஸ்தானை சேர்ந்த பி.டி.ஐ., எனப்படும், பாகிஸ்தான் - தெஹ்ரீக் - இ - இன்சாப் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆசாத் கைசர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாகிஸ்தானின் பிரதான எதிர்க்கட்சியான பி.டி.ஐ., கட்சியை சேர்ந்த ஆசாத் கைசர், இம்ரான் கான் ஆட் சியில், அந்நாட்டு லோக் சபாவில் சபாநாயகராக இருந்தார். தற்போது எம்.பி.,யாக இருக்கும் அவர், சமீபத்தில் மேற்காசிய நாடான யு.ஏ.இ., எனப்படும், ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு சென்றிருந்தார்.
அங்கு விமான நிலையத்திலும், ஹோட்டலிலும் பாகிஸ்தானியர்கள் அவமதிக்கப்பட்டதாக பார்லிமென்டில் நேற்று புகார் தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் பார்லிமென்டில் ஆசாத் கைசர் கூறியதாவது: நான் யு.ஏ.இ., சென்றிருந்தபோது திடீரென விமானம் ரத்து செய்யப் பட் டது. பயணியர் அனைவரும் தங்குவதற்கு ஹோட்டல் வசதி கோரினர்.
அப்போது அங்கு வெளியிடப்பட்ட அறிவிப்பில், அமெரிக்கா மற்றும் இந்திய பாஸ்போர்ட் வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே ஹோட்டலில் தங்குமிடம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் நாட்டவர் புறக்கணிக்கப்பட்டு அவமதிக்கப்பட்டனர்.
யு.ஏ.இ.,யில், 15 லட்சத்துக்கும் அதிகமான பாகிஸ்தானியர் உள்ளனர். அது ஒரு சகோதர இஸ்லாமிய நாடு என்றாலும், அங்குள்ள பாகிஸ்தானியரின் உழைப்பு நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம்.
அமெரிக்கா -- ஈரான் மோதலின் போது பாகிஸ்தான் நடுநிலையாக செயல்பட்டபோதிலும், நமக்கு இந்த நிலை ஏற்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது.
எனவே, இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவு பாதிக்கப்படாமல் இருக்க, இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் உடனடியாக தலையிட்டு, உரிய விளக்கம் கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி னார்.