📅 Friday, 09 October 2026 IST | புரட்டாசி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion October 09, 2026 04:03 AM

இந்து சமய அறநிலையத்துறை செயல்பாடுகள் குறித்து அமைச்சர் ரமேஷ் தலைமையில் சீராய்வுக் கூட்டம்

இந்து சமய அறநிலையத்துறை செயல்பாடுகள் குறித்து அமைச்சர் ரமேஷ் தலைமையில் சீராய்வுக் கூட்டம்

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தலைமையில் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து சீராய்வுக் கூட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக வெளியான செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய்யின் நல்லாட்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்சீ.ரமேஷ் தலைமையில் இன்று சென்னை, நுங்கம்பாக்கம், ஆணையர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள், சட்டமன்றப் பேரவை அறிவிப்புகள் குறித்தும், கோவில் திருப்பணிகள், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள், பெருந்திட்ட வரைவு பணிகள் குறித்து அனைத்து அலுவலர்களுடன் சீராய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் திருப்பணிகள், கிராமப்புற கோவில்களில் திருப்பணிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள கோவில்களில் திருப்பணிகள், கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்தல், முதுநிலை கோவில்களில் ஆன்மிகப் புத்தக விற்பனை நிலையங்கள் அமைத்தல், பதவி உயர்வு, ஓய்வூதியம், கருணை அடிப்படையிலான பணி நியமனம், காலிப்பணியிடங்களை நிரப்புதல், கோவில்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், மருத்துவ மையங்கள், அமைத்தல், தீத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல், இணைய வழியாக கோவில் பிரசாதம் பெறுவதற்கு பதிவு செய்தல் உள்ளிட்ட பொருண்மைகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், யானைகள் நலவாழ்வு முகாம், கோசாலை பராமரிப்பு, உலோகத் திருமேனிகள் பாதுகாப்பு மையங்கள், ஆன்மிக சுற்றுலா, அன்னதான திட்டம், ஒருகால பூசை திட்டம், கோவில்களில் காலியாக உள்ள பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர் பதவிகளுக்கான நியமனம் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார்.

அறிவுறுத்தல்

இக்கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பேசுகையில், அனைத்து கோவில்களிலும் நேர்மையான, வெளிப்படையான மற்றும் பொறுப்புமிக்க நிர்வாகம் உறுதி செய்யப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார். கோவில் நிலங்கள் மற்றும் சொத்துகள் மீது ஆக்கிரமிப்பு, சட்டவிரோதமாக பெயர் மாற்றம் அல்லது உரிமை கோரும் முயற்சிகள் எதையும் அனுமதிக்க கூடாது என்றும், இதுபோன்ற சம்பவங்கள் கண்டறியப்பட்ட உடனே நடவடிக்கை மேற்கொண்டு, காவல்துறையில் புகார் அளித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்றும், திருக்கோவில் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருந்தால், அதன் முழு விவரங்களை முன்பாகவே தலைமையிடத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மறுப்பு அறிக்கை

வலியுறுத்தல்

முக்கிய பிரமுகர்கள் கோவிலுக்கு வருகை தந்தால் தலைமையிடத்திற்கு தெரிவிக்க வேண்டும். வீடியோ, புகைப்படம் எடுக்க எக்காரணம் கொண்டும் அனுமதிக்க கூடாது எனவும், கல்வெட்டு வைக்கும் போது அரசு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். பொதுமக்களின் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலிக்க வேண்டும். அதிக மக்கள் வருகை தரும் கோவில்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்னதானம் சாப்பிட வரும் பக்தர்களை நீண்ட நேரம் காத்திருக்க வைக்க கூடாது எனவும் வலியுறுத்தினார்.

கோவில்கள் நேரில் ஆய்வு

அனைத்து கோவில்களிலும் தூய்மை, பாதுகாப்பு மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் சிறப்பாக பராமரிக்கப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அலுவலர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து அதிகாரிகளும் தினசரி காலை மற்றும் மாலை கோவில்களை நேரில் ஆய்வு செய்து, நிர்வாகம், தூய்மை, பாதுகாப்பு மற்றும் பணியாளர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும். ஏதேனும் முக்கியமான பிரச்சினைகள் இருந்தால், உடனடியாக உயர் அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் என்றும் தெரிவித்தார்.

பணி நியமன ஆணை வழங்கல்

முன்னதாக, கோவில்களில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த பணியாளரின் வாரிசுதாரர்கள் 5 நபர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் வழங்கினார்.

அமைச்சர் அறிவுரை

கலந்து கொண்டனர்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.