📅 Thursday, 27 August 2026 IST | ஆவணி 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 26, 2026 05:04 AM

இரவிலும், மழையிலும் தொடரும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

இரவிலும், மழையிலும் தொடரும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

இரவிலும், மழையிலும் தொடரும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

பணி நிரந்தரம், மகப்பேறு விடுமுறை உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

சென்னை மாநாகராட்சி அலுவலகத்தில் நடைபெற்று வரும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் இரவிலும் தொடர்கிறது. பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, மகப்பேறு விடுப்பு, தனியார் மயமாக்குவதை கைவிடுவது உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தவெக அரசுக்கு எதிராக தூய்மைப் பணியாளர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். போராட்டத்தை ஒடுக்கும் வகையில் தவெக அரசு 200-க்கும் மேற்பட்ட போலீசாரைக் குவித்துள்ளதால் பதட்டமான சுழல் நிலவுகிறது. தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை தொடர்ந்து வரும் நிலையில், அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரை சந்தித்து பேசும் வரை எங்களது போராட்டம் தொடரும் என தூய்மைப் பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.