📅 Saturday, 05 September 2026 IST | ஆவணி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Technology September 05, 2026 01:03 PM

இஸ்ரோ GSLV-F17 ராக்கெட்: வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது EOS

இஸ்ரோ GSLV-F17 ராக்கெட்: வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது EOS

இஸ்ரோ GSLV-F17 ராக்கெட்: வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது EOS-05 செயற்கைகோள்!

இந்தியாவின் நிலப்பரப்பை எந்நேரமும் கண்காணிப்பதற்காக EOS-5 செயற்கைகோளானது புவிக்கு மேல் சுமார் 36 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் புவிசார் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

Published : September 4, 2026 at 7:15 AM IST

ஸ்ரீஹரிகோட்டா: ஜி.எஸ்.எல்.வி. எஃப்-17 (GSLV-F17) ராக்கெட்டை திட்டமிட்டபடி, இன்று (வெள்ளிக்கிழமை) காலை 2:55 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவியது இஸ்ரோ.

விவசாயம் மற்றும் பேரிடர் மேலாண்மை போன்ற துறைகளுக்கு துல்லியமான படங்களை வழங்கும் வகையில், இந்திய எல்லை மற்றும் நிலப்பரப்பை கண்காணிக்கும் நோக்கில் EOS-05 என்ற அதிநவீன செயற்கைகோளை GSLV-F17 ராக்கெட் விண்வெளியில் வெற்றிகரமாக நிலைநிறுத்தி உள்ளது.

நமது நாட்டின் எல்லை பாதுகாப்பு மற்றும் நிலப்பரப்பு மாற்றங்கள் குறித்த தரவுகளை உடனுக்குடன் வழங்கும் வகையில் இந்த செயற்கைகோளில் அதிநவீன கேமராக்களும், சென்சார்களும் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த கேமராக்கள் மூலம் கிடைக்கும் நிகழ்நேர படங்கள், நாட்டின் பாதுகாப்பு மட்டுமல்லாமல், பொதுத்துறை சாரந்த இதர பயன்பாடுகளுக்கும் உதவும் என இஸ்ரோ தெரிவித்திருக்கிறது.

Mission Success! GSLV-F17 has successfully accomplished its mission, placing EOS-05 into the intended orbit. Sharing a few memorable moments from the lift-off. For more information:https://t.co/VneB2jgZoY#GSLVF17 #EOS05 #ISRO pic.twitter.com/kv0zB6V5Vi

இந்தியாவின் 19வது ராக்கெட்டான GSLV-F17, 3-நிலை, 51.7 மீட்டர் நீளம் கொண்டது. 420.5 டன் எடை கொண்ட இந்த ராக்கெட்டின் முனைபகுதியில் 2 ஆயிரமும் கிலோவுக்கும் அதிகமான எடையுள்ள செயற்கைகோள் பொருத்தப்பட்டிருந்தது.

இதற்கு முன்பே, இஸ்ரோ பல புவி கண்காணிப்பு செயற்கைகோள்களை ஏவியிருந்தாலும் அவை தாழ் புவி சுற்றுப்பாதையில் இயங்கி வருகின்றன. ஆனால் முதன்முறையாக EOS-5 செயற்கைகோளானது பூமிக்கு மேலே, அதற்கு இணையாக அதன் சுற்றுப்பாதையிலேயே பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

GSLV-F17 / EOS-03 திட்டமானது 2021ஆம் ஆண்டு தோல்வியடைந்த நிலையில், GSLV-F17/EOS-05 திட்டம் அதற்கு மாற்றாக உருவாக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்திருக்கிறது.

VIDEO | Sriharikota: In a press conference after ISRO launched GSLV-F17 carrying EOS-05, ISRO Chairman Dr. V. Narayanan clarifies on choosing sub-GTO for this mission, says, “This particular vehicle, with the present configuration, as I told you, in the first launch, we got 1,500… pic.twitter.com/8v5N9kphdW

இத்திட்டத்தின் வெற்றி குறித்து, இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் கூறுகையில், “புவி படமெடுப்பு செயற்கைகோளான EOS-05-ஐ GSLV-F17 விண்கலம் திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தி இருக்கிறது என்பதை அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்று தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக இந்த கடந்த ஜனவரி 12 அன்று, 16 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி-சி62 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. ஆனால், மூன்றாம் கட்டத்தில் ஏற்பட்ட பழுதின் காரணமாக, திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் செயற்கைகோள்களை நிலைநிறுத்த தவறியது. இந்த ஆண்டு இஸ்ரோ ஏவிய முதல் ராக்கெட் தோல்வியில் முடிந்த நிலையில், 8 மாதங்கள் கழித்து தற்போது EOS-03 செயற்கைகோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.