📅 Thursday, 10 September 2026 IST | ஆவணி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 10, 2026 12:30 AM

இடைத்தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிடுமா

இடைத்தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிடுமா

தமிழ் நாட்டில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 5 சட்டசபை தொகுதிகளில் தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதன் காரணமாக இந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த முடியாத சூழல் உள்ளது.

தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இரு தொகுதிகளில் அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ஆ தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. வேட்பு மனு தாக்கல் தொடங்கி உள்ளதால் இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியது.

எம்.பி. துரை வைகோ பேட்டி:

"தமிழகத்தின் இரு தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து எம்.பி துரை வைகோ பதிலளித்துள்ளார். இது குறித்து சென்னை பனையூரில் தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது:-

மதுராந்தகம், தாராபுரம் இரு தொகுதிகளிலும் ம.தி.மு.க. கடந்த தேர்தலில் போட்டியிடவில்லை. எனவே இந்த இடைத்தேர்தலில் த.வெ.க. வேட்பாளர்கள் தான் போட்டியிட வாய்ப்புள்ளதாக நினைக்கின்றேன். ஆனால் ம.தி.மு.க. கண்டிப்பாக இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை.

ம.தி.மு.க. உறுதுணையாக இருக்கும்:

வருகின்ற இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி சார்பில் யார் வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும் அவரது வெற்றிக்கு ம.தி.மு.க. உறுதுணையாக இருக்கும் என வைகோ அவர்கள் கூட்டத்தில் பேசியுள்ளார்.

கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த கூட்டணிக்குள் வந்து இருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். இடதுசாரி கட்சிகள் அவர்களது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளனர். இந்த ஆட்சி தொடரவேண்டும் என அவர்களது ஆதரவை தொடர்ந்து தருகின்றனர். நிச்சயமாக இந்த கூட்டணியில் இடதுசாரி கட்சிகள் இடம்பெறும் என நான் நம்புகிறேன்," என்றார்.