📅 Sunday, 23 August 2026 IST | ஆவணி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 23, 2026 01:01 PM

காலேஜ் கட் அடிச்சுட்டு பார்த்தேன்.. கனவிலும் நினைக்காதது நடந்து இருக்கு.. கவின் உருக்கம்!

காலேஜ் கட் அடிச்சுட்டு பார்த்தேன்.. கனவிலும் நினைக்காதது நடந்து இருக்கு.. கவின் உருக்கம்!

சென்னை: நயன்தாரா, கவின் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹாய்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. விஷ்ணு எடவன் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை ரவுடி பேபி பிக்சர்ஸ், செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் ஜீன்ஸ் ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளன. இந்த படத்தில் மறைந்த நடிகர் கே.பாக்யராஜ், ராதிகா சரத்குமார், வி.டி.வி. கணேஷ், ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஹாய்: முதலில் ஆகஸ்ட் 14ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அன்றைய தினம் வெளியான மற்ற முன்னணி நடிகர்களின் படங்களால் 'ஹாய்' படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 28ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையே இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல் ஜி.வி. பிரகாஷ் பாடிய 'கண்ணுக்குழியா' பாடலும், 'ரசகுல்லா' பாடலும் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

நினைச்சுகூட பாக்கல: படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் கவின், நான் பொதுவாக இணையத்தில் வரும் கமெண்ட்ஸ்களை எல்லாம் படிப்பதில்லை. ஆனால், இந்த படத்தின் அறிவிப்பு வெளியானபோது, ஒரு சீரியலில் நடித்துக் கொண்டிருந்த கவின், நயன்தாராவுடன் நடிப்பார் என்று ஒரு நாளும் நினைத்திருக்க மாட்டான் என்று ஒருவர் கமெண்ட் செய்திருந்தார். நான் சீரியல்களை பார்ப்பதைவிட திரைப்படங்களை பார்ப்பதற்குத்தான் அதிகம் விரும்புவேன். அதிலும் நயன்தாரா நடித்த 'யாரடி நீ மோகினி' திரைப்படம் எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த சமயத்தில் நான் திருச்சியில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன்.

கட் அடித்துவிட்டு பார்தேன்: நண்பர்களுடன் சேர்ந்து காலேஜுக்கு கட் அடித்துவிட்டு தியேட்டருக்கு சென்று 'யாரடி நீ மோகினி' படத்தை பார்த்திருக்கிறேன். அப்போது தியேட்டரில் நயன்தாராவை பார்த்து வியந்து ரசித்துக் கொண்டிருந்த அந்த கவின், எதிர்காலத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடிப்பான் என்று ஒரு நாளும் நினைத்திருக்க மாட்டான். உண்மையில் நயன்தாராவுடன் நடிப்பது என்பது என்னுடைய பக்கெட் லிஸ்டில் கூட இருந்தது கிடையாது. பக்கெட் லிஸ்டுக்கு வெளியே இருந்த விஷயம். இப்போது நயன்தாராவுடன் இணைந்து நடித்ததை நினைத்து பார்க்கும்போது, நாமும் நன்றாகத்தான் உழைத்திருக்கிறோம் என்று நினைக்க தோன்றுகிறது என கவின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். சீரியலில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்துள்ள கவினின் இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது