📅 Thursday, 13 August 2026 IST | ஆடி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 13, 2026 12:03 PM

காவிரி நீர் விவகாரம்: மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு நோட்டீஸ்

காவிரி நீர் விவகாரம்: மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு நோட்டீஸ்

புதுடெல்லி,

காவிரி நீர் விவகாரம் தொடர்பாக மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

மழைக்கால கூட்டத்தொடர்

எதிர்க்கட்சிகளின் அமளி மற்றும் கோஷம் காரணமாக மக்களவை நடவடிக்கைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டது. கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று இந்த விவகாரத்தில் இருதரப்புக்கும் இடையே சமரசம் ஏற்படுமா? இல்லை இன்றும் எதிர்க்கட்சிகள் அவையை முடக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஒத்திவைப்பு நோட்டீஸ்

இந்த நிலையில், காவிரி நீர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு நோட்டீஸ் வழங்கியுள்ளார். அதில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு பின்பற்றவில்லை. தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படாததால், காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி கேள்விக்குறியாகியுள்ளது.

லட்சக்கணக்கான விவசாயிகள் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கின்றனர் டெல்டா மாவட்ட விவசாயிகள் நாள்தோறும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்; இந்த அவசரமான விவகாரம் குறித்து மக்களவையின் வழக்கமான அலுவல்களை ஒத்திவைத்து உடனடியாக விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.