Kanyakumari District Holiday : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும்
Kanyakumari District Holiday : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
Kanyakumari District Holiday : எப்போது தொடர் விடுமுறை வரும் காத்திருந்த மக்களுக்கு குஷியான விடுமுறை தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அறிவிப்பாக ஆகஸ்ட் 28 ஆம் தேதி வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறைக்கு சுற்றுலா செல்ல ரெடியா.?
விடுமுறை என்றாலே அனைவருக்கும் கொண்டாட்டம் தான். அந்த வகையில், வார முழுவதும் ஓடி ஓடி உழைத்தவர்களுக்கு ஒரு நாள் விடுமுறை கிடைத்தாலே சந்தோஷம் தான். அந்த வகையில் விடுமுறையில் வீட்டில் ஓய்வு எடுக்க விரும்புவார்கள். அதிலும் தொடர் விடுமுறையாக வந்தால் கேட்கவா வேண்டும், உடனே உறவினர்கள் வீட்டிற்கோ, நண்பர்கள் வீட்டிற்கோ சுற்றுலாவிற்கு பறந்து விடுவார்கள். எனவே எப்போது விடுமுறை வரும்.? என காத்திருக்கும் மக்களுக்கு வார விடுமுறையோடு சேர்த்து கூடுதலாக ஒரு நாள் விடுமுறை கிடைத்தால் குஷி தான். அந்த வகையில் வருகிற ஆகஸ்ட் 28ஆம் தேதி வெள்ளிக்கிழமையானது விடுமுறை தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி உள்ளூர் விடுமுறை
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநாராயணகுரு பிறந்ததினத்தை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வருகிற 28-ந்தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. கேரள மறுமலர்ச்சியின் தந்தையாக போற்றப்படும் ஸ்ரீநாராயண குருவை பின்பற்றுவோர்கள் கன்னியாகுமரியில் பெருமளவில் வாழ்ந்து வருகின்றனர்.
எனவே ஸ்ரீநாராயணகுரு பிறந்த நாளையொட்டி விடுமுறை அளிக்க வேண்டும் என தொடர்ந்து அந்த மாவட்ட மக்கள் வலியுறுத்தி வந்தனர். இதனையடுத்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஸ்ரீநாராயணகுரு பிறந்ததினத்தை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வருகிற ஆகஸ்ட் 28-ந்தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
விடுமுறையையொட்டி கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்கள் செயல்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக, செப்டம்பர் 12-ஆம் தேதி வேலை நாளாக கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்கள் செயல்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதே நேரம் அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ளும் வகையில் அரசு ஊழியர்கள் பணியில் இருப்பார்கள் எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
எனவே ஆகஸ்ட் 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாதத்தின் 4வது சனிக்கிழமை ஆகஸ்ட் 29 ஆம் தேதியும், ஆகஸ்ட் 30 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என தொடர் விடுமுறை வரவுள்ளதால் கன்னியாகுமரி மாவட்ட மாணவர்கள் மட்டுமில்லாமல், அரசு ஊழியர்களும் குஷியில் உள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி