கோவையில் சினிமாவை மிஞ்சும் சேசிங் குட்கா கடத்தல் கும்பல் அதிரடியாக கைது!!
கோவையில் சினிமாவை மிஞ்சும் சேசிங் குட்கா கடத்தல் கும்பல் அதிரடியாக கைது!!
கோவை: கோவையில் சினிமாவை மிஞ்சும் வகையில் சேசிங் செய்து காரில் 300கிலோ குட்கா கடத்தல் கும்பலை அதிரடியாக கைது செய்திருக்கிறார்கள். குட்கா கடத்திய வட மாநில இளைஞர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். கோவை விளாங்குறிச்சியில் வாகன சோதனையின் போது காவல் துறையினரை தள்ளிவிட்டு தப்பிய காரை காவல் துறையினர் சுமார் 100கிலோமீட்டர் தூரம் துரத்தி சென்று அவிநாசியில் காரை மடக்கி பிடித்தனர்.
கோவில்பாளையம் காவல் உதவியாளர் விக்கினேஷ் என்பவரை தள்ளிவிட்டு காரில் தப்பிய வடமாநில இளைஞர்களை, பிடிக்க காவலர் வேல்முருகன் காரின் மேல் ஏறி படுத்தபடி சென்றார், தொடர்ந்து அவிநாசி கருமத்தும்பட்டி கோவில்பாளையம் காவல் துறையினர் மற்றும் கனியூர் சுங்கச்சாவடி ஊழியர்கள் இணைந்து இந்த காரை சுற்றி வளைத்து பிடித்தனர். காரில் சுமார் 300கிலோ குட்கா இருந்தது, காவல் துறையினர் அந்த காரை பிடித்ததுக்கு பின்பு தெரிய வந்திருக்கிறது.
இதை அடுத்து மூன்று வட மாநில இளைஞர்களையும் கைது செய்த போலீசார் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் கார் சேசிங் வீடியோவானது சமூக வலைத்தளங்களில் பரவி வைரல் ஆகிவருகிறது, விசாரணைக்கு பின்பு இவர்கள் யார் என்பது தெரியவரும் என போலீசார் கூறியுள்ளனர்.