📅 Monday, 28 September 2026 IST | புரட்டாசி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 28, 2026 05:03 AM

 பல மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

 பல மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையத்தின் நேற்றைய அறிக்கை:

தெற்கு உள் ஒடிசா மற்றும் அதையொட்டிய சத்தீஸ்கர் பகுதிகளில், நேற்று முன்தினம் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து, நேற்று காலை, 5:30 மணியளவில் வலுவிழந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக, அதே பகுதியில் நிலவுகிறது.

இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கலாம்.

அதனால் இன்று, மே ற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சி, அரியலுார்.

பெரம்பலுார், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் சில இடங்களில், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யலாம்.

தமிழகத்தின் மற்ற பகுதிகளில், ஒரு சில இடங்கள் மற்றும் காரைக் கால் பகுதிகளில், இடி, மின்னலுடன், லேசான மழை பெய்யலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட் டத்துடன் காணப்படும். சில பகுதிகளில், இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யலாம் .

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.