📅 Saturday, 15 August 2026 IST | ஆடி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 15, 2026 05:04 PM

மாதம் 1000 ரூபாய் சேமிப்பு : 7 .5 % வட்டி : போஸ்ட் ஆபிஸின் இந்த சூப்பர் ஹிட் திட்டத்தின் முழு கணக்கு மற்றும் பயன்கள்

மாதம் 1000 ரூபாய் சேமிப்பு : 7 .5 % வட்டி : போஸ்ட் ஆபிஸின் இந்த சூப்பர் ஹிட் திட்டத்தின் முழு கணக்கு மற்றும் பயன்கள்

நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை மிக மிக பாதுகாப்பான வழியில் சேமிக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு இரண்டு வழிகள் உள்ளது. லாபத்தை விட பணத்தின் பாதுகாப்பு முக்கியம் என நினைப்பவர்கள் வங்கி FD மற்றும் போஸ்ட் ஆபிஸ் திட்டங்களில் முதலீடு செய்வார்கள். அந்த வகையில் தற்போது ஒரு போஸ்ட் ஆபிஸ் திட்டம் குறித்து தான் பார்க்கப்போகின்றோம். இந்த திட்டத்தில் முதலீடு செய்வது எப்படி ? லாபம் எவ்வளவு ? நன்மைகள் என்ன ? என்பது பற்றியெல்லாம் தற்போது பார்த்து தெரிந்துகொள்வோம்விவரம் திட்டத்தின் பெயர் -Post Office Time Deposit Schemeகுறைந்தபட்ச முதலீட்டு தொகை -1000 ரூபாய்அதிகபட்ச முதலீடு -நாம் இந்த திட்டத்தில் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.அதற்கு எந்த வரம்பும் இல்லைமுதலீடு காலம் -1 முதல் 5 ஆண்டுகள் வரை முதலீட்டு காலத்தை தேர்வு செய்யலாம்வட்டி விகிதங்கள்1 ஆண்டு முதலீடு -6.90% வட்டி விகிதம் 2 ஆண்டு முதலீடு -7.00% வட்டி விகிதம்3 ஆண்டு முதலீடு -7.10% வட்டி விகிதம்5 ஆண்டு முதலீடு -7.50% வட்டி விகிதம்72 விதிநீங்கள் இந்த திட்டத்தில் ஐந்து ஆண்டுகள் முதலீடு செய்தால் உங்களுக்கு 7 .5 % வட்டி வருமானம் கிடைக்கும். மேலும் 72 விதிப்படி உங்களுடைய முதலீடு இரட்டிப்பாக கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் ஆகும்வரி விலக்குநீங்கள் ஐந்து ஆண்டுகால திட்டத்தை தேர்வு செய்யும் பட்சத்தில் பழைய வருமான வரி சட்டத்தின் கீழ் 1 .5 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம்கணக்கு துவங்குவதற்கான தகுதிகள்1.18 வயது நிரம்பிய யாராக இருந்தாலும் இந்த கணக்கை துவங்கலாம்2.2 அல்லது 3 நபர்களாக சேர்ந்தும் கூட கூட்டு கணக்கை துவங்கலாம்3.10 வயதை தாண்டிய குழந்தைகள் தங்கள் பெயரில் இந்த கணக்கை இயக்க முடியும். அதே சமயம் பெற்றோர்களின் தங்களின் குழந்தைகளின் பெயரில் இந்த கணக்கை இயக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது