மேகமலை விவகாரத்தில் தேனி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டம்!
மேகமலை விவகாரத்தில் தேனி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டம்!
தேனி: மேகமலை புலிகள் காப்பக விவகாரத்தில் தங்களை வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் சாலையில் அமர்ந்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தைக் காரணம் காட்டி, அங்குள்ள 98 மலை கிராம மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் எனக் கூறி வெளியேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இப்பகுதிகளில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக (மூன்று தலைமுறைகளாக) வசித்து வரும் தங்களை வண்டல் நிலங்கள் மற்றும் காடுகளிலிருந்து அப்புறப்படுத்துவது வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என மக்கள் கொந்தளித்துள்ளனர்.
மேகமலை மலைவாழ் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை கைவிடக் கோரி, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக 98 மலைக்கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். புலிகள் காப்பகம் என்ற பெயரில் மேகமலை மலைவாழ் மக்களை வெளியேற்ற வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு சீராய்வு மனுதாக்கல் செய்யக்க செய்யக் கோரி மலைவாழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம், திமுக எம்பி தங்கதமிழ்செல்வன், திமுக எம்எல்ஏ மகாராஜன், முன்னாள் எம்எல்ஏ கம்பம் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த போராட்டத்தில் பெண்கள், மாணவ, மாணவிகள், குழந்தைகள் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்று கண்டன முழக்கமிட்டு வருகின்றனர்.