📅 Wednesday, 14 October 2026 IST | புரட்டாசி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 14, 2026 06:04 PM

மிஸ்டர் கழுகு: வீரமணி வழக்கில் தங்கக்கட்டிகள்... விரியும் விசாரணை வளையம்!

மிஸ்டர் கழுகு: வீரமணி வழக்கில் தங்கக்கட்டிகள்... விரியும் விசாரணை வளையம்!

மிஸ்டர் கழுகு: வீரமணி வழக்கில் தங்கக்கட்டிகள்... விரியும் விசாரணை வளையம்!

தமிழ்நாட்டையே உலுக்கிய ஜெம் கிரானைட் வீரமணி வழக்கில், மூன்று காவல்துறை அதிகாரிகளை அழைத்து விசாரித்திருக்கிறது ஸ்பெஷல் டீம். ஒவ்வொருவரும், ‘எனக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை

“நீங்கதான் பிரதமர் வேட்பாளர் என அமைச்சர்கள் பேசி வருவதால்தான், பிரதமரின் கான்வாய் வாகனத்தில் முதல்வர் ஏற முயன்றார்போல...” என யாரிடமோ போனில் பேசியபடி அலுவலகத்துக்கு வந்தார் கழுகார். அவருக்குச் சூடான கேப்புச்சினோ கொடுத்தோம். “என்னயா நக்கலா?” என்று கேட்டுவிட்டு, செய்திக்குள் நுழைந்தார்.

“முன்னாள் முதல்வர் ஸ்டாலின், ‘தமிழ்நாட்டில் அரிவாள் வெட்டுக்கும், மின்வெட்டுக்கும் இடையேதான் போட்டியே!’ என்று கடுமையாக விமர்சித்துவருகிறார். இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள அமைச்சர்கள் அறையிலேயே மின்வெட்டு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக, மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் கேபினிலேயே அரை மணி நேரத்துக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. இன்னொரு பக்கம், அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை தாறுமாறாக உயர்ந்திருக்கிறது. சட்டம்-ஒழுங்கு பிரச்னையும் கட்டுக்குள் வருவதாகத் தெரியவில்லை. பொதுமக்களை நேரடியாக பாதிக்கும் இத்தகைய விவகாரங்களை முதல்வர் விஜய் சீரியஸாக எடுத்துக்கொள்வதில்லையாம். உணவு வழங்கல்துறை அமைச்சர் வெங்கட்ராமன், ‘அரிசி விலை உயரவில்லை, சராசரியாகவே இருக்கிறது’ என்று பேசிவருவது கூடுதல் சர்ச்சையாகிவிட்டது. ஆனாலும், இது குறித்து அரசுத் தரப்பில் எதுவுமே கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என்றுதான் புரியவில்லையாம்...”

“சரி... அ.தி.மு.க-வுக்குள் ஏதோ ஆலோசனைக் கூட்டமெல்லாம் நடக்கிறதாமே?”

“எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், நத்தம் விசுவநாதன் ஆகியோர்தான் கூடிக் கூடிப் பேசிவருகிறார்கள். இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி பரிதாபத் தோல்வியடைய வேண்டுமென த.வெ.க-வுக்குப் பின்வாசல் வழியாக உதவியிருக்கிறது இந்த மூவரணி. அவர்கள் எதிர்பார்த்த முடிவுகள் வந்ததும் களத்தில் குதித்துவிட்டார்கள். அக்டோபர் 11-ம் தேதி முதலே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. த.வெ.க-வுக்கு ஆதரவளிக்க மூன்றில் இரண்டு பங்கு எம்.எல்.ஏ-க்கள் வேண்டும். தற்போது அ.தி.மு.க-வில் 41 எம்.எல்.ஏ-க்கள் இருப்பதால், 28 பேரின் ஆதரவைத் திரட்டிவிட, பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அதற்கு முன்பாக தலைமையை மாற்றுவதற்கான முயற்சிகளிலும் இறங்கியிருக்கிறார்கள். அதிலொரு ட்விஸ்ட் இருக்கிறது.”

“என்ன ட்விஸ்ட்?”

“த.வெ.க ஆட்சிமீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் 25 பேரை த.வெ.க-வுக்கு வாக்களிக்க வைத்தார் வேலுமணி. அமைச்சரவையில் இடம் கொடுக்க த.வெ.க மறுத்துவிட்ட பிறகு, அந்த எம்.எல்.ஏ-க்களை அழைத்துக்கொண்டு எடப்பாடி பழனிசாமியிடம் மன்னிப்புக் கடிதமும் கொடுக்கவைத்தார். இதனால், ‘வேலுமணியை நம்ப முடியாது’ என எம்.எல்.ஏ-க்கள் சிலர் தங்களுக்குள் பேசிவருகிறார்களாம். வேலுமணி தரப்பின் நகர்வுகள் எடப்பாடியின் கவனத்துக்குச் சென்றபோது, ‘அவங்களால எதுவும் பண்ண முடியாது’ என நக்கலாகச் சொல்லிச் சிரித்திருக்கிறார். யார் கை ஓங்கப்போகிறது என்பது விரைவிலேயே தெரிந்துவிடும்.”

“நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மன உளைச்சலில் இருக்கிறாராமே...”

“இடைத்தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, அடுத்த நான்கு நாள்களுக்கு வீட்டைவிட்டு வெளியே வரவில்லையாம் சீமான். கட்சி அலுவலகத்துக்கு வராமல், நிர்வாகிகளிடமும் பேசாமல் முடங்கியிருக்கிறார். ‘இந்த மக்களை நம்பி அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் நிற்க முடியாது’ என்று தன்னைப் பார்க்க வந்தவர்களிடம் சொல்லிப் புலம்பியிருக்கிறார். ‘நாம் கூட்டணிக்குச் செல்லவில்லை என்றால் கட்சியிலிருந்து பலரும் வெளியேறிவிடுவார்கள்’ என்று சுற்றியிருப்பவர்கள் அலர்ட் செய்திருப்பதால், கடும் மன உளைச்சலில் இருக்கிறாராம் சீமான்” என்ற கழுகாருக்கு மிளகு தட்டையைக் கொடுத்தோம். கொறித்தபடி கவர் ஸ்டோரியில் பார்வையை ஓடவிட்டவர், “தி.மு.க தொடர்பாக என்னிடம் ஒரு தகவல் இருக்கிறது...” என்றபடி செய்திகளைத் தொடர்ந்தார்.

“தி.மு.க தலைவர் ஸ்டாலின் கொஞ்சம் ரிலாக்ஸாக இருப்பதால், கட்சி மறுசீரமைப்பு விவகாரங்களை நிறுத்திவிடக் காய்நகர்த்துகிறார்கள் சீனியர்கள். ‘தலைவரே... களத்தில் சீனியர் - ஜூனியர் காம்பினேஷன்தான் எடுபடுகிறது. மறுசீரமைப்பை வலுக்கட்டாயமாகச் செய்தால் சீனியர் நிர்வாகிகள் ஒதுங்கிவிடுவார்கள்’ என்று சொல்லியிருக்கிறார்கள். அதேநேரம், ‘எதிர்வரும் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் இளைஞரணியினருக்கு வாய்ப்பு கொடுங்கள்’ எனக் கோரியிருக்கிறார் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி. வழக்கம்போல முடிவெடுக்க முடியாமல் தடுமாறிப்போயிருக்கிறார் ஸ்டாலின்.”

“வி.சி.க தலைவர் திருமாவளவன் தி.மு.க-வைச் சீண்டியிருக்கிறாரே?”

“பா.ம.க-வுக்கு த.வெ.க தூண்டில் போட ஆரம்பித்துவிட்டதை உணர்ந்து, திண்டிவனம் பொதுக்கூட்டத்தில் வெடித்துவிட்டார் திருமா. ‘கூட்டணிக்கு பா.ம.க வந்தால் நாங்கள் வெளியேறுவோம்’ என்று சொன்னதோடு, ‘35 மார்க் எடுத்தால்தான் பாஸ். இரண்டாம் இடத்துக்கு வந்த தி.மு.க-வுக்கு முதலிடம் பெறக் கூட்டணி வேண்டாமா... பாஸாக ஒரு மார்க் தேவை என்றாலும், அந்த மார்க்கைப் போடுவதற்கு ஒரு வாத்தியார் வேண்டாமா?’ என்று தி.மு.க கூட்டணிக்குச் செல்லும் தன் விருப்பத்தை மறைமுகமாக வெளிப்படுத்தியிருக்கிறார். திருமாவின் பேச்சுக்கு தி.மு.க பதிலடி கொடுத்திருக்கிறது.”

“என்ன பதிலடி?”

“அதாவது, ‘தாமாகவே படித்து அடுத்த முறை ஒரு மார்க் எடுத்துக்கொள்வான் இந்த மாணவன்’ என்றிருக்கிறார் தி.மு.க முன்னாள் எம்.பி அப்துல்லா. காங்கிரஸையும் வி.சி.க-வையும் மீண்டும் கூட்டணிக்குள் சேர்ப்பதற்கு உதயநிதிக்குத் துளியும் விருப்பமில்லையாம். தி.மு.க-விலுள்ள ஜூனியர் நிர்வாகிகள் பலருமே உதயநிதியின் மனநிலையில்தான் இருக்கிறார்கள். ‘இனி எங்க வழி தனி வழி’ என முடிவெடுத்து, தனி டிராக்கில் செல்ல ஆரம்பித்துவிட்டது அறிவாலயம்” என்ற கழுகார், அச்சுக்குத் தயாராகிக்கொண்டிருந்த ‘ரூ.5 கோடி சர்ச்சையில் ஐ.ஜி பாலகிருஷ்ணன்!’ என்ற கட்டுரையை எடுத்துப் படித்துவிட்டு, அதில் கூடுதல் தகவலைச் சொல்ல ஆரம்பித்தார்.

“மருத்துவமனை விவகாரத்தில் தங்கள் தரப்புக்குச் சாதகமாகப் பஞ்சாயத்து பேச, தஞ்சையில் பவர்ஃபுல்லாக இருந்த பா.ஜ.க நிர்வாகியை அணுகியதாம் சரவணன் தரப்பு. அந்த நிர்வாகியும் தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி, ஆளுநர் அலுவலகம் வரை பஞ்சாயத்தைக் கொண்டுபோயிருக்கிறார். அதில் சீனியர் காக்கி கடுப்பானதால்தான், பா.ஜ.க நிர்வாகியை ‘லாக்’ செய்ய பாலியல் குற்றச்சாட்டு வெடித்ததாம். அதையடுத்து, பா.ஜ.க நிர்வாகி தனது ஆட்டத்தை ஆரம்பித்ததன் விளைவாகவே, தற்போது ஐ.ஜி-மீது 5 கோடி ரூபாய் பணப் பேர புகார் வெடித்திருக்கிறதாம்.”

“சரிதான்... ஒருவழியாக, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு இயக்குநரை நியமித்துவிட்டார்களே!”

“நியமித்ததெல்லாம் சரி... ‘அதற்கு பிரேம் ஆனந்த் சின்ஹாவைத்தான் நியமிக்க வேண்டுமா, வேறு ஆள் இல்லையா?’ என்று கோட்டையிலுள்ள ஐ.ஏ.எஸ்-களே பொருமுகிறார்கள். ‘தி.மு.க ஆட்சியில், கிட்னித் திருட்டு விவகாரத்தில் சின்ஹா தலைமையில்தான் எஸ்.ஐ.டி அமைக்கப்பட்டது. மதுரை மாநகராட்சி ஊழல் வழக்கை விசாரிக்கும் பொறுப்பும் அவரிடம்தான் தரப்பட்டது. இந்த வழக்குகளில் தி.மு.க பிரமுகர்களுக்குச் சம்பந்தம் இருந்தும்கூட, யார்மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை சின்ஹா. அவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறையைக் கொடுத்தால், தி.மு.க-மீது என்ன நடவடிக்கை எடுப்பார்?’ என்ற கேள்வி, கோட்டையில் சுற்றிவருகிறது”

‘‘தமிழக நீர்வளத்துறையில் கடந்த ஆட்சியின் போது, `டெண்டர் எடுத்தவர்கள் குறிப்பிட்ட தொகையை கமிஷனாகக் கொடுத்தால்தான், அரசுத் தரப்பில் வழங்கவேண்டிய தொகையை விடுவிப்போம்’ என ஒப்பந்ததாரர்களிடம் சொல்லிவிட்டார்களாம். இதற்காக, சென்னையில் உயரதிகாரிகளின் கூட்டம் நடந்திருக்கிறது. அந்தக் கூட்டத்துக்கு வந்த துறையின் ‘முக்கியஸ்தர்’, ‘ஒப்பந்ததாரர்களிடமிருந்து கமிஷன் தொகையை வசூலிக்கவில்லையென்றால், டிரான்ஸ்ஃபர் உள்ளிட்ட சிக்கல் வரும்ப் என அதிகாரிகளிடம் ஓப்பனாகச் சொல்லிவிட்டாராம். இதனால், துறை அதிகாரிகளும், ஒப்பந்ததாரர்களும்அதிர்ந்துபோயிருக்கிறார்களாம்...’’

‘‘இதுதான் தூய ஆட்சிக்கான லட்சணமா?’’ எனக் கேட்க, அதைக் காதில் வாங்காமலேயே, ``அர்லேகரை முழுநேர தமிழக கவர்னராக நியமித்திருக்கிறார், ஜனாதிபதி. இது, அரசியல் வட்டாரங்களில் பதைபதைப்பை ஏற்படுத்தியிருக்கிறது’’ என்ற கழுகார், ஜெம் கிரானைட் வழக்கின் அப்டேட்டுக்குள் நுழைந்தபடி கிளம்புவதற்கு ஆயத்தமாகி,