📅 Saturday, 12 September 2026 IST | ஆவணி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 12, 2026 10:33 AM

மனித உரிமை மீறல் சம்பவங்கள் நாள்தோறும் அரங்கேறும் இடமாக தமிழ்நாடு மாறி இருக்கிறது

மனித உரிமை மீறல் சம்பவங்கள் நாள்தோறும் அரங்கேறும் இடமாக தமிழ்நாடு மாறி இருக்கிறது

மனித உரிமை மீறல் சம்பவங்கள் நாள்தோறும் அரங்கேறும் இடமாக தமிழ்நாடு மாறி இருக்கிறது என்று திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

சென்னை ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் பெண்களை அடித்து துன்புறுத்திய சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது.

சந்தேகத்தின் பேரில் அழைத்துச் செல்லப்பட்டவர்களை பார்க்கச் சென்ற வள்ளி என்ற பெண்ணையும், அவரது மகன் திருமலையையும் காவல்துறையினர் தாக்கி லாக்கப்பில் அடைத்ததாகவும், இதைத் தட்டிக்கேட்ட வழக்கறிஞர் ஜெயந்தியை ஆண் காவலர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும், சம்பவத்தை வீடியோ எடுத்த வள்ளியின் மகள் மீனாவையும் தாக்கிய கொடூரமும் நிகழ்ந்ததாக தெரிய வருகிறது.

பெரும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் நாள்தோறும் அரங்கேறும் இடமாக தமிழ்நாடு மாறி இருக்கிறது. பெண்களை காவல் நிலையத்திலேயே வைத்து இதுபோன்று துன்புறுத்துவதுதான் தவெக சொன்ன மாற்றங்களில் ஒன்றா? இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.