📅 Saturday, 12 September 2026 IST | ஆவணி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 12, 2026 12:39 PM

“பா.ஜ.க-வுக்கு பயப்படுகிறது த.வெ.க!”

“பா.ஜ.க-வுக்கு பயப்படுகிறது த.வெ.க!”

“பா.ஜ.க-வுக்கு பயப்படுகிறது த.வெ.க!” - சொல்கிறார் பாலபாரதி

கடந்தகாலங்களில், தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி வரிசையில் மாறி மாறி அமர்ந்திருக்கின்றன.

த.வெ.க தலைமையில் ‘மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி’ உதயமாகியிருக்கிறது. ஆனால், ஆளுங்கட்சிக்கு ஆதரவு அளித்துவரும் கம்யூனிஸ்ட் கட்சிகள், த.வெ.க கூட்டணிக் கட்சிக் கூட்டத்தையே புறக்கணித்துவிட்டன. இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான பாலபாரதியிடம் நமது கேள்விகளை முன்வைத்தோம்...

“த.வெ.க கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தை கம்யூனிஸ்ட்டுகள் புறக்கணித்ததற்கான காரணம் என்ன?”

“குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுவிடக் கூடாது; பா.ஜ.க-வின் ஆதரவோடு நேரடியாகவோ, மறைமுகமாகவோ மற்றொரு ஆட்சி அமைந்துவிடவும் கூடாது என்ற காரணங்களுக்காகத்தான் த.வெ.க ஆட்சி அமைய இடதுசாரிகள் வெளியிலிருந்து ஆதரவு என்ற முடிவுக்கு வந்தோம். இப்போது ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் த.வெ.க-வுக்கு ஒரு கூட்டணி தேவைப்படுகிறது. அதேசமயம், த.வெ.க-வின் கொள்கைகள் என்னென்ன, அவர்களுடைய ஆட்சி அதிகாரம் எப்படியிருக்கும் என்பது குறித்தெல்லாம் எந்த ஆய்வும் செய்யாமல், நாங்கள் கூட்டணிக்குள் சென்றுவிட முடியாது. எனவே, `வெளியிலிருந்து ஆதரவு’ என்ற நிலைப்பாட்டிலேயே தொடர்கிறோம்.”

“த.வெ.க ஆட்சி அமைந்து 100 நாள்களைக் கடந்துவிட்ட பின்னரும், ஆட்சியாளர்கள்மீது கம்யூனிஸ்ட்டுகளுக்கு நம்பிக்கை ஏற்படவில்லையா?”

“த.வெ.க ஆட்சியின் மீது எங்களுக்கு நம்பிக்கை வருகிறதா, இல்லையா என்பதைவிடவும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறதா என்பதுதான் இங்கே முக்கியம். ஏனெனில், மக்களுக்கான பிரச்னைகளில் த.வெ.க அரசு இன்னமும் ரொம்ப தூரமாகவேதான் இருக்கிறது. எனவே, மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்துகிற ஓர் அரசாக, அவர்கள்தான் தங்கள் நடவடிக்கைகளை மாற்றிக்கொண்டு மக்களோடு நெருங்கிவர வேண்டும். ‘த.வெ.க தலைமையிலான அரசு, மதச்சார்பற்ற அரசாகச் செயல்படும்’ என அவர்கள் எழுதிக்கொடுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் இடதுசாரிகள் இந்த அரசுக்கு ஆதரவு கொடுத்துவருகிறோம்.”

“ `திருப்பதி கோயிலில் வேளாண் பட்ஜெட் வைத்து வழிபாடு, ஜெபமாலையுடன் பட்ஜெட் உரை என த.வெ.க அரசு மதச்சார்பற்ற அரசாகவும் செயல்படவில்லை’ என்ற விமர்சனம் இருக்கிறதே?”

“ஆமாம். கருத்தடைக்கு எதிரான மதக் கூட்டத்தில் சபாநாயகர் பிரபாகர் கலந்துகொண்டது, திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான ஆவணப்படத்தை வெளியிட விடாமல் காவல்துறையினர் தடுத்தது என த.வெ.க-வின் தொடர்ச்சியான செயல்பாடுகள் அவர்களது மதச்சார்பற்ற தன்மையை கேள்விக்குறியாக்கியிருக்கின்றனதான். இது குறித்த விவாதங்கள் கம்யூனிஸ்ட்டுகள் மத்தியிலும் பெரிய அளவில் இருக்கின்றன.”

“பா.ஜ.க ஆதரவுக் கட்சி ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என த.வெ.க அரசுக்கு ஆதரவு அளிக்கிறீர்கள். ஆனால், ‘நீட் போராட்ட ஒடுக்குமுறை, இடதுசாரிகளுக்கு எதிரான சுற்றறிக்கை என பா.ஜ.க-வின் கட்டுப்பாட்டில்தான் த.வெ.க அரசே இயங்குகிறது’ என்கின்றனவே எதிர்க்கட்சிகள்?”

“எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களில் நியாயம் இருக்கிறது. ஆனாலும், த.வெ.க அரசு, பா.ஜ.க-வின் கட்டுப்பாட்டுக்குள் போய்விட்டது என்று சொல்ல முடியவில்லை.

அதேநேரம், பா.ஜ.க-வை விமர்சிக்கவேண்டிய - கோரிக்கையை வலியுறுத்தவேண்டிய இடத்தில் இருந்தும்கூட த.வெ.க-வினர் கனத்த மௌனம் காத்துவருவதால், ‘ஏன் இந்த அமைதி... த.வெ.க-வின் நிலைப்பாடுதான் என்ன?’ என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன.

‘இடதுசாரி மாணவர்களைக் கண்காணிக்க வேண்டும்’ என்ற சுற்றறிக்கை மாவட்ட நிர்வாகம், காவல்துறை, வருவாய்த்துறை என மூன்று துறைகளைத் தாண்டி வெளிவருகிறது. ஆனால், சட்டமன்றத்தில் அது குறித்து பதிலளிக்கும் அமைச்சர் விஸ்வநாதனோ, ‘அந்தச் சுற்றறிக்கை குறித்து முதல்வர் கவனத்துக்கே வரவில்லை. எங்கள் துறைக்கும் அது பற்றித் தெரியாது’ என்கிறார். அப்படியென்றால், ‘த.வெ.க அரசு, பா.ஜ.க-வை எதிர்க்கும்’ என்று சொல்வதை மக்கள் எப்படி நம்புவார்கள்?”

“நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடர் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியிருக்கிறதே..?”

ஆனால், இப்போது காவல்துறை மானியக் கோரிக்கையில், தேவையே இல்லாமல் மிசா குறித்துப் பேசி, அரசியல் பிரச்னையாக்கிவிட்டார் முதல்வர். இதையெல்லாம் பார்க்கிற மக்களேகூட, ‘மிசா ஒடுக்குமுறை சட்டம் குறித்த அடிப்படை உண்மைகூட ஆட்சியாளர்களுக்குத் தெரியவில்லையா?’ என்றுதான் அதிர்ச்சியாகிறார்கள். அதனால்தான் தோழர் பெ.சண்முகமும், ‘முதலில் வரலாற்றைப் படியுங்கள்’ என ஆளுங்கட்சியினருக்கு அறிவுறுத்தியிருக்கிறார். சட்டமன்ற மாண்பை மதித்து அனைவரும் நடந்துகொள்ள வேண்டும்.”

“ ‘பா.ஜ.க-வில் இருக்கும் ‘பா’ என்ற எழுத்தை உச்சரிக்கக்கூட த.வெ.க பயப்படுகிறது’ என்கிறாரே எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி?”

“உண்மைதான். தேர்தலின்போதும் இதே விமர்சனம் முன்வைக்கப்பட்டது. ஆனால், அப்போது இது குறித்து நம்மால் எதையும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால், இன்றைக்கு ஆட்சி அதிகாரத்துக்கு வந்துவிட்ட பிறகும்கூட, ஒன்றிய பா.ஜ.க அரசு குறித்து ஆளுங்கட்சியினர் எந்தக் கருத்தும் சொல்லாமல் இருந்தால், இப்படிப்பட்ட கேள்விகள் எழத்தானே செய்யும்!”