📅 Tuesday, 08 September 2026 IST | ஆவணி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 08, 2026 08:04 PM

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: மும்முனைப் போட்டியில் வெற்றிக்கனியை ருசிக்கப் போவது யார்?

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: மும்முனைப் போட்டியில் வெற்றிக்கனியை ருசிக்கப் போவது யார்?

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: மும்முனைப் போட்டியில் வெற்றிக்கனியை ருசிக்கப் போவது யார்?

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் நன்கு அறியப்பட்ட பிரபலமான முகம் மரகதம் குமரவேல் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அதுவும் தவெகவிற்கு பலமாக பார்க்கப்படுகிறது.

Published : September 8, 2026 at 7:01 PM IST

பாண்டியராஜ்.ப

சென்னை: நடைபெற உள்ள இடைத்தேர்தலில், தவெகவை எப்படியாவது வீழ்த்த வேண்டுமென திமுக மற்றும் அதிமுக தயாராகி வருகிறது.

அடுத்தடுத்து அரங்கேறிய ராஜினாமாக்கள்

நடைபெற்று முடிந்த 2026 சட்டமன்ற தேர்தலுக்குப் பின்னர், திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதலமைச்சர் விஜய், திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

அதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம், மதுராந்தகம், தாராபுரம் என தொடர்ந்து 6 சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து, தவெகவில் இணைந்தனர்.

வெற்றியை எதிர்த்து வழக்கு

இடைத்தேர்தல் அறிவிப்பு

ஆட்டத்தை தொடங்கிய அதிமுக

திமுக நாளை ஆலோசனை

இடைத்தேர்தல் தொடர்பாக இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு பதில் அளிக்காமல் புறப்பட்ட சென்றார்.

இந்நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் மற்றும் அதன் பொறுப்பு மாவட்ட செயலாளர்களுடன் நாளை மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். அதனைத் தொடர்ந்து, விருப்ப மனு விநியோகம் அல்லது வேட்பாளர் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேட்பாளர்களை அறிவிக்கும் சீமான்

சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆளும் தவெக, எதிர்க்கட்சி திமுக மற்றும் அதிமுக இடையே மும்மனைப் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நாம் தமிழர் கட்சியும் இடைத்தேர்தலுக்கு முன்பே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது. இன்னும் ஓரிரு தினங்களில் இரண்டு தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிக்க உள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று ஆதரவு மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி நடத்தி வரும் விஜய்யின் செல்வாக்கை எப்படியாவது இந்த இடைத்தேர்தலின் மூலமாக குறைக்க வேண்டும் என திமுக மற்றும் அதிமுக தீவிர முனைப்பு காட்டி வருகின்றன.

ஆளும் கட்சியாக இருந்த திமுக எதிர்க்கட்சியாக மாறியதும், எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக மூன்றாவது இடத்திற்கு போனதையும் தற்போது வரை ஏற்க முடியாமல் இரண்டு கட்சிகளுமே உள்ள நிலையில் இடைத்தேர்தல் மூலமாக தமிழக வெற்றிக் கழகத்தின் தொடர் பாய்ச்சலுக்கு, ஒரு முட்டுக்கட்டையை போட வேண்டும் என திட்டமிட்டு வருகின்றன.

120 நாள்கள் ஆட்சி, லஞ்சம் மற்றும் ஊழலற்ற நிர்வாகம் எனும் பரப்புரையை பிரதானமாகவும், மகளிருக்கான கட்டணமில்லா 'வெற்றிப் பயணம்', தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம், அண்ணன் சீர், இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம் அறிவிப்பு உள்ளிட்டவைகளை ஆட்சியின் சாதனைகளாக எடுத்து வைத்து வாக்குகளை பெற தவெகவும் வியூகம் வகுத்து வருகிறது.

அமைச்சர்கள் மீதான முறைகேடு புகார்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சனை, பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டு மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகள் உள்ளிட்ட ஆட்சிக்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்து திமுகவும் தேர்தல் பிரச்சாரத்தை முன்வைக்க தயாராகி வருகிறது.

அதேபோல், அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களை குதிரை பேரம் மூலம் விலைக்கு வாங்கியே ராஜினாமா செய்ய வைத்ததாகவும், அதன் காரணமாகவே தற்போது இடைத்தேர்தல் வந்திருப்பதை சுட்டிக்காட்டியும், அமைச்சர்கள் செயல்பாடு, சட்டமன்ற பிரச்சனை, விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட விவகாரங்களை முன்னெடுத்து, அதிமுகவை மீண்டும் வெற்றி பெற வைக்கும் முனைப்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் தீவிரம் காட்டி வருகிறார்.

தவெகவிற்கான சாதகங்கள்

இடைத்தேர்தல் நடைபெற உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இரண்டு சட்டமன்ற தொகுதிகளுமே தனித் தொகுதிகளாக இருப்பது தவெகவிற்கு பலமாக பார்க்கப்படுகிறது.

தவெகவின் அமைச்சரவையில் 8 பட்டியல் சமூக அமைச்சர்கள் உள்ள நிலையில், பட்டியல் இனத்தவர்களுக்கான பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது அச்சமுக மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக தவெக அரசின் அமைச்சரவையில் மற்றும் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடம் பெற்றுள்ளது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

பலம் சேர்க்கும் 35% வாக்கு வங்கி

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக எனும் இரண்டு பெரிய திராவிட கட்சிகளை பின்னுக்குத் தள்ளி, முதல் தேர்தலை சந்தித்த தமிழக வெற்றிக் கழகம் 34.92% வாக்குகளை பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதிலும் குறிப்பாக இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் அதிமுகவின் சார்பில் போட்டியிட்டு, 69,284 வாக்குகள் பெற்று மரகதம் குமரவேல் வெற்றி பெற்றார்.

தவெக சார்பில் போட்டியிட்ட எழில் கேத்தரின் 61,738 (31.32%) வாக்குகள் பெற்று, 7,194 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தார்.

இந்த நிலையில் இடைத்தேர்தலில் மரகதம் குமரவேலுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் பட்சத்தில், அவரின் தனிப்பட்ட செல்வாக்கு மற்றும் ஏற்கனவே தவெக பெற்ற வாக்குகள் , தற்பொழுது கூட்டணி மற்றும் ஆதரவு அளித்து வரும் கட்சிகளின் வாக்குகள் என தமிழக வெற்றிக் கழகத்திற்கான வெற்றி வாய்ப்பை உறுதி செய்யும் எதிர்பார்க்கப்படுகிறது.

சவாலான தாராபுரம்

கொங்கு மண்டலத்தில் உள்ள தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் கடந்த முறை அதிமுகவின் சார்பில் போட்டியிட்டு 81,100 வாக்குகள் பெற்று, வெற்றி பெற்ற பி.சத்தியபாமா தனது பதவியை ராஜினாமா செய்து, தவெகவில் இணைந்த நிலையில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவின் பலம் வாய்ந்த கொங்கு மண்டல பகுதியில் அமைந்துள்ள தொகுதி என்பதாலும், கடந்த முறையும் அதிமுக உறுப்பினரே வெற்றி பெற்ற தொகுதி என்பதாலும், அதிமுகவின் கை சற்று ஓங்கியே உள்ளது. திமுகவின் சார்பில் போட்டியிட்ட இந்திராணி சுமார் 64 ஆயிரத்து 373 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம்பிடித்தார்.

அதேபோல், கடந்த தேர்தலில் இத்தொகுதியில் போட்டியிட்ட தவெகவின் வேட்பாளர் கௌரி சித்ரா சுமார் 46,438 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தை பெற்ற நிலையில், தவெகவின் 120 நாள் ஆட்சி மற்றும் பிரச்சார வியூகம், கூட்டணி கட்சிகளின் பலம் தாராபுரம் சட்டமன்ற தொகுதியின் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

தவெக வெற்றிக் கழகத்தின் வெற்றிப் பயணம் தொடருமா? அல்லது மீண்டும் திராவிட கட்சிகளை நோக்கி வாக்குகள் செல்லுமா? என்பது அக்டோபர் 9-ஆம் தேதி தெரியும்.