📅 Saturday, 15 August 2026 IST | ஆடி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 15, 2026 04:00 PM

முதன்முறையாக கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் விஜய்

முதன்முறையாக கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் விஜய்

சென்னை: இந்தியாவின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து தமிழக முதல்வர் விஜய் மரியாதை செலுத்தினார்.

பின்னர் சிறப்புரை ஆற்றிய அவர் தங்கள் உயிர், உடைமைகளை தியாகம் செய்து சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்துவதாக குறிப்பிட்டார்.

இன்றைய சூழலில் தமிழகத்தை லஞ்சம், ஊழலில் இருந்து காப்பாற்றுவதும் ஒரு பெரிய விடுதலைக்குச் சமமானது என்றார் அவர்.

ஊழலற்ற, நேர்மையான நிர்வாகத்தை நோக்கியே தவெக அரசு செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட திரு விஜய், பொதுவாழ்வில் எந்த சமரசமும் இருக்கக் கூடாது என்றும் மக்கள் நலன் மட்டுமே பிரதானம் என்றும் தெரிவித்தார்.

மத்திய அரசுடன் நிர்வாக ரீதியாக ஒத்துழைப்பு அளிப்போம் என்றும், மாநிலத்தின் உரிமைகளுக்கு எதிரான மத்திய அரசின் முடிவுகளைத் தொடர்ந்து எதிர்ப்போம் என்றும் அவர் திட்டவட்டமாக குறிப்பிட்டார் .

முந்தைய ஆட்சிக் காலத்தின் ‘அம்மா உணவகம்’ போன்ற நல்ல நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படும் எனக் கூறிய முதல்வர் விஜய், சுதந்திர தின நன்னாளில் புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கான ‘தாய் மாமன்’ தங்க மோதிரம் வழங்கும் திட்டம் செப்டம்பர் 15 முதல் தொடங்கப்படும் என்றும் தியாகிகளுக்கான ஓய்வூதியம் உயர்த்தப்படும் என்றும் அறிவித்தார்.

முன்னதாக புனித ஜார்ஜ் கோட்டையில் முதன் முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைக்க வாகனங்கள் புடைசூழ வருகை தந்த முதல்வரை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

முப்படையினர், காவல்துறையினரின் கம்பீரமான அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பின்னர் தேசியக் கொடியை ஏற்றினார் முதல்வர் விஜய்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

அப்போது தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இவ்விழாவில் முதல்வரின் பெற்றோர், தமிழக அமைச்சர்கள், நடிகை த்ரிஷா உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.