📅 Saturday, 15 August 2026 IST | ஆடி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 15, 2026 04:01 PM

அனைத்துலக சந்தையை குறி வைக்கும் ராஜமௌலி

அனைத்துலக சந்தையை குறி வைக்கும் ராஜமௌலி

இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் ‘வாரணாசி’ படத்தின் வியாபாரம் அனைத்துலக திரைத்துறை வியக்கும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஓராண்டாக அப்படத்தின் படப்பிடிப்பு வாரணாசி நகரில் நடைபெற்று வருகிறது. படத்தின் விளம்பரத்துக்காக பல கோடிகளை வாரி இறைக்க தயாரிப்புத் தரப்புத் திட்டமிட்டுள்ளதாம்.

வழக்கமாக வட அமெரிக்காவைக் கடந்து பிரான்ஸ், லத்தீன் அமெரிக்க திரைச் சந்தைகளை மட்டுமே ராஜமௌலி நம்பியுள்ளார்.

காரணம், அவரது முந்தைய படங்களுக்கு அந்நாடுகளில் பெரும் வசூல் கிடைத்தது. ஜப்பானிலும் ராஜமௌலியின் படங்களுக்கென தனிச் சந்தை உருவாகியுள்ளது.

எனினும் சீனாவில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லையாம். இதனால் ராஜ் மௌலி வருத்தத்தில் உள்ளாராம்.

பிரான்ஸ், லத்தின் அமெரிக்க நாடுகளில் ‘பாகுபலி’, ‘ஆர்ஆர்ஆர்’ படங்கள் வெற்றி அடைந்ததையடுத்து ‘வாரணாசி’ படத்துக்கு அனைத்துலக சந்தையை குறி வைத்துள்ளது ராஜமௌலியின் குழு.

எனவே, படத்தின் விளம்பரங்களில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறாராம் ராஜ மௌலி.

இந்தப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி வெளியாகிறது.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

பிரித்திவிராஜ், சுகுமாரன், பிரியங்கா சோப்ரா முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்துக்கு கிரவானி இசைமைக்கிறார்.