நேற்று மாலையில் ஆறுதல் அளித்து இன்று காலையில் ஏற்றம் கண்ட தங்கம் விலை
நேற்று மாலையில் ஆறுதல் அளித்து இன்று காலையில் ஏற்றம் கண்ட தங்கம் விலை - ஒரு சவரன் எவ்வளவு?
இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ. 260-க்கும், ஒரு கிலோ ரூ. 2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Published : August 12, 2026 at 2:23 PM IST
சென்னை: ஆபரண தங்கம் 22 காரட்டின் விலை இன்று சவரனுக்கு ரூ. 400 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,13,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வரும் நாட்களில் தங்கம் விலை இன்னும் குறையும் என்று எதிர்பார்த்திருந்தவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக தங்கம் விலை கண்ணை கட்டும் அளவிற்கு அதிகரித்து வருகிறது. இதற்கு அமெரிக்காவின் வேலைவாய்ப்பின்மை முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. பொதுவாக அமெரிக்க ஃபெடரல் வங்கியின் வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டால் தங்கம் விலை குறையும்.
ஆனால் வட்டி விகிதத்தை உயர்த்தும் அளவிற்கு அமெரிக்காவின் பொருளாதாரம் இல்லை. இதனால் ஆண்டுதோறும் செப்டம்பர் மாத கூட்டத்தில் எடுக்கப்படுகிற வட்டி விகித உயர்வு குறித்த முடிவானது இன்னும் சில மாதங்களுக்கு தள்ளிப் போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதுவரை தங்கம் விலை ஏறுமுகத்திலேயே தான் இருக்குமா? என்றால், இப்போதைக்கு ஆம் என்பது தான் பதிலாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள். தங்க விலை உயர்வு சொற்ப அளவில் நகை வாங்குகிறவர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தினாலும், நகை முதலீட்டாளர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
நேற்று (ஆகஸ்ட் 11) ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு காலையில் ரூ. 300 அதிகரித்து மாலையில் ரூ. 100 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,150-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று மீண்டும் ரூ. 50 அதிகரித்து இன்று ஒரு கிராம் ரூ. 14,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, நேற்று காலை சவரனுக்கு ரூ. 2,400 அதிகரித்து, மாலை ரூ. 800 குறைந்து ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 1,13,200-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ. 400 அதிகரித்து ரூ. 1,13,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 கிராம் - ரூ. 14,200
ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 சவரன் - ரூ. 1,13,600
வெள்ளி ஒரு கிராம் - ரூ. 260
வெள்ளி ஒரு கிலோ - ரூ. 2,60,000
கடந்த 10 நாட்களில் 22 காரட் தங்கத்தின் விலை
வெள்ளி விலை நேற்று கிராமுக்கு ரூ. 10 அதிகரித்து ரூ. 260-க்கும், கிலோவுக்கு ரூ. 10,000 அதிகரித்து ரூ. 2,60,000-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று விலை மாற்றமின்றி அதே விலையில் விற்பனையாகி வருகிறது.