ஜேசன் சஞ்சய், தமன், யுவன் மேஜிக்.. இணையத்தை கலக்கும் 'சிக்மா' செகண்ட் சிங்கிள்!
சென்னை: தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் 'சிக்மா'. லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இப்படத்தின் இருந்து இரண்டாவது பாடல் வெளியாகி உள்ளது.
சிக்மா: ஜேசன் சஞ்சய் இயக்கி இருக்கும் இப்படத்தில் மாநகரம், ராயன் போன்ற படத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த சந்திப் கிஷன் லீட் ரோலில் நடித்துள்ளார். மேலும், பிரியா அப்துல்லா, ராஜூ சுந்தரம், சம்பத் ராஜ், பண்டிட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். லைக்கா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜேசன் சஞ்சய் தயாரிப்பில் உருவாகி உள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் அதிரடி படமான இப்படத்தின் அதிரடியான டீசர்வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
அய்யய்யோ அம்மாடி: இப்படத்தில் இருந்து 'சிக்மா ஸ்டைல்' என்ற முதல் பாடல் வெளியாகி இணையத்தில் டிரெண்டாகி இருக்கும் நிலையில் தற்போது படத்தில் இருந்து 'அய்யய்யோ அம்மாடி' என்ற இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. தமனின் இசையில் யுவன் சங்கர் ராஜா மற்றும் சஞ்சனா திவாகர் கல்மஞ்சே இணைந்து பாடி இருக்கும் இந்த பாடலுக்கு பாடல் வரிகளை விவேக் எழுதி உள்ளார். மெலோடி பாணியில் உருவாகியுள்ள இந்தப் பாடலை யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளது சிறப்பு அம்சம். இந்த பாடல் வெளியான சிறிது நேரத்திலேயே இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
விரைவில் ரிலீஸ்: சிக்மா திரைப்படம் ஜூலை 31ந் தேதி வெளியாகும் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையில், ஜன நாயகன் படம் வெளியானதால் படத்தில் ரீலிஸ் தள்ளிவைக்கப்பட்டது. சிக்மா படத்தின் வெளியீட்டு தேதியை விரைவில் தயாரிப்பு நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் தமிழ் மற்றும் தெலுங்கு இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு இருக்கும் இயக்குநர் ஜேசன் சஞ்சய் யூடியூப் சேனல்களில் படம் குறித்து பேசி வருகிறார்.