📅 Friday, 25 September 2026 IST | புரட்டாசி 9, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Videos news September 25, 2026 06:01 PM

ஓல்டு அப்பர் தாம்சன் ரோடு மின்கம்பத்தில் குரங்கு சேட்டை

ஓல்டு அப்பர் தாம்சன் ரோடு மின்கம்பத்தில் குரங்கு சேட்டை

நீண்ட வால் குரங்குகள் ஓல்டு அப்பர் தாம்சன் ரோடு வட்டாரத்திலுள்ள மின்கம்பங்களில் ஏதோ செய்துகொண்டிருப்பதைக் காட்டும் புகைப்படங்களும் காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

செப்டம்பர் 21 அன்று எடுக்கப்பட்ட காணொளியில் மின்கம்பத்தில் அமர்ந்திருந்த குரங்கு ஒன்று, தனது இரு கைகளாலும் தெருவிளக்கைச் சரிசெய்துகொண்டிருந்ததைக் காணமுடிந்தது.

மற்றொரு குரங்கு ஒரு விளக்குக் கம்பத்தின் மீது நின்றுகொண்டிருந்தது. மேற்பார்வையாளர் போல அது காணப்பட்டது.

மற்றொரு குரங்கு, சாலையோரத்தில் இருந்த மஞ்சள் கோட்டின் மீது அமர்ந்து, தெருவிளக்குக் கம்பத்திலிருந்து அகற்றப்பட்டதாக நம்பப்படும் கருப்பு நிற, வட்ட வடிவக் கருவியை ஆய்வு செய்துகொண்டிருந்தது. அதன் உறை திறந்திருந்ததால், உள்ளிருக்கும் பாகங்கள் வெளியே தெரிந்தன.

குறைந்தது மூன்று அல்லது நான்கு தெருவிளக்குக் கம்பங்களிலிருந்தும் இதேபோன்ற உபகரணங்கள் அகற்றப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறினர். சில பாகங்கள் சாலையிலோ அல்லது சாலையோரத்திலோ விடப்பட்டிருந்தன.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த தேசிய பூங்காக் கழகம், நீண்ட வால் கொண்ட குரங்குகள் மின்கம்பத்தின் பாகங்களை அகற்றுவதைக் காட்டும் காணொளி பற்றி ஏற்கெனவே அறிந்திருப்பதாகக் குறிப்பிட்டது.

இதற்கு முன்னரும் இதேபோன்றதொரு குரங்குச் சேட்டை அந்தப் பகுதிக்கு அருகில் நடந்ததாகத் தங்களிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் அது கூறியது.

அவை மக்காக்கு வகையைச் சேர்ந்த குரங்குகள் என்றும் அத்தகைய குரங்குகள் இயல்பாகவே ஆராய்வதில் ஆர்வமுள்ளவை என்றும் கழகத்தின் வனவிலங்கு நிர்வாகக் குழு இயக்குநர் ஹவ் சூன் பெங் தெரிவித்தார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

தங்களது சுற்றுச்சூழலில் அறிமுகமில்லாத பொருள்களை அவை ஆராயக்கூடும் என்றும் அவர் கூறினார்.