📅 Tuesday, 18 August 2026 IST | ஆவணி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 17, 2026 07:00 PM

பாஜக தேசிய செயலாளர்களில் ஒருவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.வெங்கடேசன்

பாஜக தேசிய செயலாளர்களில் ஒருவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.வெங்கடேசன்

புதுடெல்லி: இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தேசியச் செயலாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த வெங்கடேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தேசிய அளவில் கட்சியில் அமைப்பு ரீதியாக பல மாற்றங்களைப் பாஜக மேற்கொண்டுள்ளது.

பாஜகவின் தேசியத் தலைவராக கடந்த ஜனவரி மாதம் நிதின் நவீன் பொறுப்பேற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, அவரது தலைமையின்கீழ் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் நடைபெற்றுள்ளன.

கட்சியின் தேசியத் துணைத் தலைவர்கள், பொதுச் செயலர்கள் உள்ளிட்ட முக்கியப் பதவிகளுக்கான பட்டியலை நிதின் நவீன் வெளியிட்டுள்ளார். மூத்த தலைவர்களின் அனுபவத்தையும் புதிய நிர்வாகிகளின் ஆற்றலையும் ஒருங்கிணைக்கும் வகையில் இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன.

அமைப்புப் பொதுச்செயலாளராக பி.எல்.சந்தோஷ் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். பொருளாளராக பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.

ராஜஸ்தானைச் சேர்ந்த வசுந்தரா ராஜே சிந்தியா, உத்தராகண்டைச் சேர்ந்த தீரத் சிங் ராவத், டெல்லியைச் சேர்ந்த ராம் மாதவ், உத்தரப் பிரதேசத்தின் ஸ்மிருதி ராணி உட்பட 11 பேர் துணைத் தலைவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தேசியப் பொதுச் செயலர்களாக எட்டுப் பேரும், தேசியச் செயலாளர்களாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.வெங்கடேசன் உட்பட 16 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.