📅 Monday, 31 August 2026 IST | ஆவணி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 31, 2026 12:04 PM

பால் கொள்முதல் விலை ரூ41ல் இருந்து ரூ.44 ஆக அதிகரிப்பு; சட்டசபையில் முதல்வர் விஜய் அறிவிப்பு

பால் கொள்முதல் விலை ரூ41ல் இருந்து ரூ.44 ஆக அதிகரிப்பு; சட்டசபையில் முதல்வர் விஜய் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்ந்துள்ளது; ஏற்கனவே ரூ.41 ஆக இருந்த விலை, ரூ.44 ஆக அதிகரிக்கப் படுவதாக முதல்வர் விஜய் அறிவித்தார்.

சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் வெளியிட்ட அறிவிப்பு:

* தமிழகத்தில் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்ந்துள்ளது; ஏற்கனவே ரூ.41 ஆக இருந்த விலை, ரூ.44 ஆக அதிகரிக்கப்படுகிறது. பால் கொள்முதல் விலையை உயர்த்தியதால் ஆவினுக்கு ஏற்படும் கூடுதல் செலவை அரசே ஏற்கும்.

* தூத்துக்குடியில் புதிதாக இரண்டு நியூ தெர்மல் பவர் ஸ்டேஷன் அமைக்கப்படும். 800 மெகாவாட் திறன் கொண்ட 2 அலகுகளுடன் மொத்தமாக 1600 மெகாவாட் திறன் கொண்ட நியூ தெர்மல் பவர் ஸ்டேஷன் 20 ஆயிரத்து 800 கோடி ரூபாயில் நிறுவப்படும்.

* தமிழ்நாடு மின் தொடரமைப்பு கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் 33 ஆயிரத்து 66 கோடி ரூபாயில் செயல்படுத்தப்பட உள்ளது. 196 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும். 15 ஆயிரம் கிலோ மீட்டர் நீளமுடைய புதிய மின்பாதைகள் அமைக்கப்படும்; ஏற்கனவே உள்ள மின்பாதைகள் வலுப்படுத்தப்படும்.

* தமிழகத்தின் மத்திய பகுதியில அமைந்துள்ள திருச்சியில் பல்முனை சரக்கு போக்குவரத்து மையம் அமைக்கப்படும். தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மூலம் ஆய்வு மேற்கொண்டு திட்ட அறிக்கை தயார் செய்யப்படும்.

* தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மூலம் கோயம்புத்தூரில் டிஜிட்டல் நிதி மையம் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும். உலகத் தரத்திலான வசதிகள், அலுவலக இடங்கள், புத்தொழில் நிறுவனங்கள், நவீன ஆய்வகங்கள், பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு போன்ற அதிநவீன வசதிகள் இம்மையத்தில் இடம்பெறும். உலகளாவிய முதலீடுகளை ஈர்க்கவும், நவீன தொழில்நுட்பங்களை ஊக்குவிக்கவும், உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இத்திட்டத்தில் வழிவகை செய்யப்படும்.

* காஞ்சிபுரம் மாவட்டம், மதுரமங்கலத்தில் செமிகண்டக்டர் மற்றும் மின்னணுவியல் உற்பத்திப் பூங்கா 175 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிப்காட் நிறுவனம் மூலம் அமைக்கப்படும். உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சி வசதிகள் ஏற்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் இத்துறையில் 2 ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடுகள் ஈர்க்கப்படும். 5,000 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும்.

இவ்வாறு முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

சிறப்பு வீடியோ!

சட்டசபையில் முதல்வர் விஜய் அறிவித்த முக்கிய அறிவிப்புகள் என்னென்ன? தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்