📅 Wednesday, 30 September 2026 IST | புரட்டாசி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 30, 2026 10:01 PM

‘பீஸ்ட்‘ வில்லன் மாஸ்க் மாதிரியே இருக்கே? சீரியலில் வந்த 'மாஸ்க்' கூத்து.. நெட்டிசன்கள் ட்ரோல்!

‘பீஸ்ட்‘ வில்லன் மாஸ்க் மாதிரியே இருக்கே? சீரியலில் வந்த 'மாஸ்க்' கூத்து.. நெட்டிசன்கள் ட்ரோல்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் சில நேரங்களில் லாஜிக்கே இல்லாமல் எடுக்கப்படும் காட்சிகள், சோஷியல் மீடியாவில் நெட்டிசன்களுக்கு செம மீம் மெட்டீரியலாக மாறிவிடுவது வழக்கமான ஒன்றுதான். முன்பு சன் டிவியின் ரோஜா சீரியலில் நடுரோட்டிலேயே டாக்டர்கள் பிளாஸ்டி சர்ஜரி செய்த காட்சி இணையத்தில் எந்த அளவுக்கு ட்ரோல் செய்யப்பட்டதோ, அதே அளவிற்குத் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'கார்த்திகை தீபம்' சீரியலின் ஒரு காட்சியும் பயங்கரமாக சிக்கிச் சின்னப்பின்னமாகி வருகிறது.

மாஸ்க் பிளான்: சீரியலில் கதாநாயகி ரேவதிக்கு, ஏற்கனவே ஏமாற்றிய மகேஷையே மீண்டும் திருமணம் செய்து வைக்க சந்திரகலா பிளான் போடுகிறாள். ஆனால், மகேஷின் உண்மையான முகம் தெரிந்தால் சாமுண்டீஸ்வரி சம்மதிக்க மாட்டார் என்பதால், அவனது உருவத்தையே மாற்றி வேறு ஒரு நபராக காட்ட நினைக்கிறாள். இதற்காக ஒரு மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டை வரவழைத்து, ஒரு ரப்பர் முகமூடியை (Mask) மகேஷின் முகத்தில் மாட்டிவிடுகின்றனர். அந்த மாஸ்க்கை போட்ட உடனே அவனது முகமே ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிவிட்டது போலவும், அவனை பார்த்தால் யாருமே கண்டுபிடிக்க முடியாது என்பது போலவும் சீரியலில் காட்டியுள்ளனர்.

பீஸ்ட் பட வில்லன் மாஸ்க் : இந்த காட்சி சீரியலில் ஒளிபரப்பானதும், சோஷியல் மீடியாவில் நெட்டிசன்கள் விழுந்து விழுந்து சிரிக்க தொடங்கிவிட்டனர். தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' படத்தில் தீவிரவாதிகள் அணியும் முகமூடி போலவே இந்த மாஸ்க் இருப்பதாகவும், ஒரு ரப்பர் மாஸ்க்கை போட்டு கொண்டால் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிடுவாரா? என்றும் ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர். வெப் சீரிஸ், ஹாலிவுட் படங்களில் காட்டப்படும் மேக்கப் தொழில்நுட்பங்கள் கூட பார்க்கும்படி இருக்கும். ஆனால், 2026-லும் இப்படி ஒரு பிளாஸ்டிக் பொம்மை மாஸ்க்கை வைத்துக்கொண்டு, சாமுண்டீஸ்வரியை ஏமாற்ற போகிறோம் என்று காட்சி அமைத்திருப்பதை நெட்டிசன்களால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. இதையெல்லாம் கொஞ்சமாவது யோசித்து எடுக்க வேண்டாமாடா சாமி... யாரை ஏமாற்ற இந்த மாதிரி சீன் வைக்குறீங்க? என ரசிகர்கள் காரசாரமாகக் கேள்விகளை எழுப்பி, இந்தக் காட்சியைத் தற்போது சோஷியல் மீடியாவில் பயங்கரமாக ட்ரோல் செய்து வருகின்றனர்!