📅 Wednesday, 19 August 2026 IST | ஆவணி 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 19, 2026 01:31 PM

போலீஸ் லத்திசார்ஜ்.. மீடியா என்ட்ரி.. ஸ்டேஷனுக்கே வந்த எஸ்.பி.. கார்த்திகை தீபம்!

போலீஸ் லத்திசார்ஜ்.. மீடியா என்ட்ரி.. ஸ்டேஷனுக்கே வந்த எஸ்.பி.. கார்த்திகை தீபம்!

சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில் சாமுண்டேஷ்வரியிடம் சென்று, எதற்காக அவரை கைது செய்தீங்க, உடனே சாமுண்டேஷ்வரி, நீ இந்த வீட்டுக்குள்ள வந்தால், அவன் வெளியே வருவான் என சொல்கிறாள். இதனால் ஆத்திரம் அடைந்த ரேவதி, அவரை எப்படி வெளியில் கொண்டு வர வேண்டும் என எனக்குத் தெரியும் சொல்லிவிட்டு, நேராக போலீஸ் ஸ்டேஷனின் முன்பு உட்கார்ந்து தர்ணா செய்கிறார். இது எல்லாம் சாமுண்டேஷ்வரியின் சதி என தெரிந்து கொண்ட ஊர் மக்களும், ரேவதிக்கு ஆதரவாக, போலீஸ் ஸ்டேஷனின் முன்பு திரண்டு, போலீஸ் அராஜகம் ஒழிக ஒழிக என கோஷம் போடுகின்றனர்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில் ரேவதியின் போராட்டம் குறித்து சாமுண்டீஸ்வரி மற்றும் சந்திரகலாவுக்கு தகவல் கிடைக்கிறது. அதே நேரத்தில், கார்த்திக்காக நீதிக்கேட்டு ஊர் மக்களும் ரேவதிக்கு ஆதரவாக ஒன்றிணைவதால் போராட்டம் விஸ்வரூபம் எடுக்கிறது. இதனால், இன்ஸ்பெக்டர் சந்திரகலாவிற்கு போன் செய்து இதற்கு மேல் சமாளிக்க முடியாது என சொல்கிறார். உடனே சந்திரகலா, சாமுண்டீஸ்வரியிடம் அக்கா அந்த ரேவதி ஸ்டேஷன்ல போராட்டம் செய்யுற, இன்ஸ்பெக்டர் என்ன பண்றது என கேட்கிறார். அந்த கார்த்தியை விடுதலை செய்துவிடலாமா என கேட்கிறார். இதனால், ஆத்திரப்படும் சாமுண்டீஸ்வரி, கோபத்தின் உச்சத்தில், பணத்தை கொடுக்கிறேன்... எல்லோரையும் அடிச்சு துரத்த சொல்லு என உத்தரவிடுகிறார். இதையடுத்து போலீசார் போராட்டக்காரர்கள் மீதும் ரேவதியின் மீதும் தடியடி நடத்த, அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.

விடுதலையான கார்த்தி: இந்த செய்தி சோசியல் மீடியாவிலும் ஊடகத்திலும் வெளியாகி பெரும் பிரச்சனையாகி விட, சம்பவ இடத்துக்கு விரைந்து வரும் மீடியாவிடம் ரேவதி நடந்த அனைத்தையும் வெளிப்படையாக கூறுகிறாள். இதனால் விவகாரம் பெரிதாக வெடிக்க, நேரடியாக அங்கு வருகிறார் எஸ்.பி.கார்த்திக்கை எந்த ஆதாரத்தின் அடிப்படையில் கைது செய்தீர்கள்? என்று இன்ஸ்பெக்டரிடம் எஸ்.பி. சரமாரியாக கேள்வி எழுப்புகிறார். பதில் சொல்ல முடியாமல் திணறும் இன்ஸ்பெக்டர், இறுதியில் வேறு வழியின்றி கார்த்திக்கை விடுதலை செய்ய நேரிடுகிறது. கார்த்திக் விடுதலையானதும், ஆவேசத்திலும் உறுதியிலும் இருக்கும் ரேவதி நேராக சாமுண்டீஸ்வரியின் வீட்டை நோக்கி புறப்படுகிறாள். அங்கு என்ன நடக்கப் போகிறது? சாமுண்டீஸ்வரியை நேருக்கு நேர் சந்தித்து ரேவதி என்ன செய்யப் போகிறாள்? என்பதை பார்க்கலாம்.