📅 Tuesday, 11 August 2026 IST | ஆடி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 11, 2026 02:03 PM

பதவி பறிப்போகும் அபாயம்.. உடனே இலங்கைக்கு புறப்படும் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகார்கர்

பதவி பறிப்போகும் அபாயம்.. உடனே இலங்கைக்கு புறப்படும் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகார்கர்

பதவி பறிப்போகும் அபாயம்.. உடனே இலங்கைக்கு புறப்படும் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகார்கர்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் இலங்கை சென்றடைந்துள்ளார். காலேவில் நடைபெறவிருக்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, கொழும்பில் இருந்து புறப்பட்ட இந்திய அணியின் பயணக் குழுவில் அவரும் இணைந்துள்ளார். சமீபத்திய தேர்வுகள் மற்றும் முடிவுகளுக்குப் பிறகு, பிசிசிஐ அஜித் அகர்கரின் பதவிக்காலம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்காததால், அவரது எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.

கடந்த மாதம் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது, ரோஹித் சர்மாவின் ஓய்வு குறித்த செய்திகள் வெளியானதை அடுத்து அஜித் அகர்கர் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன்னதாக, ரோஹித் சர்மாவின் எதிர்காலம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பிசிசிஐ செயலர் தேவாஜித் சைகியா ஒரு விளக்க அறிக்கையை வெளியிட வேண்டியிருந்தது.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, அடுத்தடுத்து ஏற்பட்ட காயங்கள் காரணமாக, அஜித் அகர்கர் மற்றும் தேர்வு குழுவினருக்கு பல சவால்கள் எழுந்துள்ளன. ஆரம்பத்தில் அணியில் இடம் பெற்றிருந்த ஜஸ்பிரித் பும்ரா மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் காயம் காரணமாக விலகியதை அடுத்து, உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய ஆகிப் நபி மற்றும் சர்பராஸ் கான் ஆகியோர் மாற்று வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் கேப்டன் ஷுப்மன் கில் ஆகியோர் கொழும்பு வந்தடைந்தவுடன், இந்த முக்கியமான டெஸ்ட் தொடருக்கான திட்டங்களை வகுக்க அஜித் அகர்கர் அவர்களுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடர்களில் ஏற்பட்ட தோல்விகள் குறித்து கௌதம் கம்பீருடன் நடத்தப்படவிருந்த, மறுஆய்வுக் கூட்டத்திலும் அஜித் அகர்கர் பங்கேற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

2023 முதல் இப்பதவியில் நீடிக்கும் அஜித் அகர்கரின் ஒப்பந்தம், சமீபத்தில் ஏப்ரல் 2026 வரை நீட்டிக்கப்பட்டது. இதன் மூலம் 2027 ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் எஞ்சிய பகுதிகளை மேற்பார்வை செய்வதில் அவர் முன்னிலையில் உள்ளார்.இலங்கைக்கு எதிரான தொடரில் இந்திய அணி எதிர்பார்த்த முடிவை தராவிட்டால், அஜித் அகர்கருக்கு பதிலாக விவிஎஸ் லட்சுமணனை தேர்வுக்குழு தலைவராக நியமிக்க பிசிசிஐ தீவிரமாக பரிசீலிக்கும் என்று கூறப்படுகிறது.