📅 Friday, 07 August 2026 IST | ஆடி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 07, 2026 05:31 PM

SOUNDARIYA NANJUNDAN: பிறந்தநாளை கொண்டாடிய பிக்பாஸ் சௌந்தர்யா.. அடேங்கப்பா இப்படி ஒரு முடிவா?

SOUNDARIYA NANJUNDAN: பிறந்தநாளை கொண்டாடிய பிக்பாஸ் சௌந்தர்யா.. அடேங்கப்பா இப்படி ஒரு முடிவா?

சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 8 மூலம் ஏராளமான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த சௌந்தர்யா நஞ்சுண்டன், தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் எளிமையாக கொண்டாடிய புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதனுடன் அவர் பதிவிட்டுள்ள உருக்கமான பதிவு தற்போது ரசிகர்களிடையே அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

மாடலிங் துறையில் தனது பயணத்தை தொடங்கிய சௌந்தர்யா நஞ்சுண்டன், பின்னர் சின்னத்திரை மற்றும் திரைப்பட வாய்ப்புகளை நோக்கி பயணித்தார். ஆனால் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது பிக்பாஸ் தமிழ் சீசன் 8. ஆரம்பத்தில் அமைதியாக விளையாடிய அவர், போட்டி முன்னேறியபோது தனது தைரியமான பேச்சு, புத்திசாலித்தனமான அணுகுமுறை, நகைச்சுவை உணர்வு மற்றும் டாஸ்க்களில் காட்டிய அர்ப்பணிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இறுதிக்கட்டம் வரை போட்டியில் நீடித்த சௌந்தர்யா, இரண்டாம் இடத்தை பிடித்து சீசனின் மிகவும் பேசப்பட்ட போட்டியாளர்களில் ஒருவராக மாறினார். "சவுண்ட்" என்று ரசிகர்கள் செல்லமாக அழைக்கும் அளவுக்கு அவருக்கு தனி ரசிகர் பட்டாளமும் உருவானது. சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் அவர், தற்போது சினிமா மற்றும் விளம்பரத் துறையிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

ரசிகர்கள் ஆதரவு முக்கியம்: இந்த நிலையில் தனது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை பகிர்ந்த சௌந்தர்யா நஞ்சுண்டன், "ஒருவேளை இந்த ஆண்டு ஜொலிப்பதற்கான ஆண்டாக இல்லாமல், வாழ்க்கையில் வரும் சவால்களை கடந்து செல்வதற்கான ஆண்டாக இருக்கலாம். எந்த சூழ்நிலையிலும் என்னை நான் இருப்பதற்காகவே நேசித்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. நான் எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும், வாழ்க்கை என்னை அழைத்துச் செல்லும் ஒவ்வொரு கட்டத்திலும் இதே அன்புடன் என்னுடன் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். எப்போதும் எனக்கு துணையாக இருந்ததற்கு மனமார்ந்த நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.

குவியும் வாழ்த்து: சிவப்பு நிற உடையில், கேக்குடன் சிரித்தபடி போஸ் கொடுத்த புகைப்படங்களும், பட்டாசு ஒளியில் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய தருணங்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. அவரது பதிவு பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், "எப்போதும் சிரித்துக்கொண்டே இருங்கள்", "உங்கள் அடுத்த கட்ட பயணம் வெற்றியாக அமையட்டும்", "ஹேப்பி பர்த்டே சவுண்ட்" என ரசிகர்கள் ஆயிரக்கணக்கான வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர்.