📅 Monday, 12 October 2026 IST | புரட்டாசி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News October 12, 2026 05:03 PM

டெல்லி ஜந்தர் மந்தரில் இனி போராட்டம் நடத்த அனுமதி இல்லை!

டெல்லி ஜந்தர் மந்தரில் இனி போராட்டம் நடத்த அனுமதி இல்லை!

புது டெல்லி: ஜந்தர் மந்தரில் இனி போராட்டங்கள் நடத்தக் கூடாது என்று டெல்லி காவல் துறை அறிவித்துள்ளது. அதே நேரத்தில் போராட்டங்களை நடத்துவதற்கு மூன்று புதிய இடங்களின் பட்டியலையும் காவல் துறை வெளியிட்டுள்ளது.

டெல்லியில் தற்போதுள்ள போராட்ட இடத்துக்கு மாற்றாக, போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கான தகுந்த இடங்களை ஆராய உள்துறை அமைச்சகம் ஒரு குழுவை அமைத்திருந்ததாக டெல்லி காவல் துறை வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், ஜந்தர் மந்தர் போராட்டம் நடத்தும் இடமாக அறிவிக்கப்பட்டிருந்தது ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அந்தச் சுற்றறிக்கை, மூன்று புதிய இடங்களையும் பட்டியலிட்டுள்ளது.

அதன்படி ராம்லீலா மைதானம், புராடி மைதானம் மற்றும் சிபிடி மைதானம் ஆகியவை போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கான புதிய இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.