Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
EPS Vs Thangamani : எடப்பாடி பழனிசாமி அணிக்கு எதிராக செயல்பட்டு வந்த எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணியில் இடம்பிடித்து வந்த தங்கமணி, தற்போது இபிஎஸ் அணிக்கு தாவியிருப்பது எதிர்ப்பு நிர்வாகிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
தேர்தல் தோல்வி- அதிமுக உட்கட்சி மோதல்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலை புரட்டிப்போட்டுள்ளது. அந்த வகையில் அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சத்தை தொட்டது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக 25 எம்எல்ஏக்கள் தனி அணியாக செயல்பட்டனர். அந்த நிர்வாகிகளின் கட்சி பதவியை பறித்தும் உத்தரவிட்டார். இதனால் இரண்டு பிரிவாக அதிமுக செயல்பட்டு வந்த நிலையில், எதிர்ப்பு நிர்வாகிகளை சமாதானம் செய்யும் வகையில் அந்த நிர்வாகிகளுக்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு பதிலாக மாநில நிர்வாகி பொறுப்பை வழங்கினார்.
ஆனால் இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணி அறிவித்தது. இந்த நிலையில் தான் விவசாயிகளுக்காக அதிமுக சார்பாக நடைபெறும் போராட்டத்தில் யார் யார் எந்த மாவட்டத்தில் போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.ஆனால் இதனை எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்படும் எஸ்.பி.வேலுமணி தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது.
இபிஎஸ் அறிவித்த போராட்டம்
இது தொடர்பாக எஸ்.பி.வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் வெளியிட்டிருந்த அறிக்கையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்த அறிவிப்பில், விவசாயிகளுக்காக வருவாய் மாவட்டங்களில் தலைமையேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னின்று நடத்த அறிவிக்கப்பட்டுள்ள பட்டியலில் இராமநாதபுரம் மாவட்டம் நத்தம் விஸ்வநாதன், தேனி மாவட்டம் எஸ்.பி.வேலுமணி, சேலம் மாவட்டம் பி.தங்கமணி, ராணிப்பேட்டை மாவட்டம் கே.பி.அன்பழகன் என அவரவர் சொந்த மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னின்று தலைமை ஏற்று நடத்துவதை தவிர்த்து, வேண்டுமென்றே வேறு மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது, இது முற்றிலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லையென தெரிவித்திருந்தார்.
இபிஎஸ் முடிவிற்கு எதிர்ப்பு
மேலும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்று நடத்த எங்களது சொந்த மாவட்டத்தை விடுத்து, வேறு மாவட்டங்களுக்கு நியமித்து, அறிவிப்பை வெளியிட்டுள்ளீர்கள். எம்.ஜி.ஆர், புரட்சிதலைவி அம்மா ஆகியோர்களின் விசுவாசிகளை புறக்கணிக்கும் வகையில் இது போன்று அறிவிப்பு வெளியிடப்படுவதாக உள்ளது. எனவே, அதிமுக சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நங்கள் முழு ஆதரவு அளிக்கின்றோம். வேறு மாவட்டங்களில் சென்று கலந்து கொள்ள இயலாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வரும் நிலையில், முன்னாள் அமைச்சரும், நாமக்கல் மாவட்ட முன்னாள் மாவட்ட செயலாளருமான தங்கமணி, சேலத்தில் நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் பேசிய அவர், எடப்பாடி பழனிசாமியை பெருமைப்படுத்தி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த நிலையில் எஸ்.பி.வேலுமணி அணியில் இருந்து எடப்பாடி பழனிசாமி அணிக்கு தங்கமணி மாறியது ஏன் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்பட்டு வரும், எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன், கேபி அன்பழகன் உள்ளிட்டவர்கள் எம்எல்ஏக்களாக உள்ளனர்.
பல்டி அடித்த தங்கமணி
எனவே தவெகவிற்கு ஆதரவு தெரிவித்து அமைச்சரவையில் இடம் பிடித்து விடலாம் என திட்டமிட்டனர். ஆனால் தங்கமணியை பொறுத்தவரை தற்போது அவர் எம்எல்ஏவாக இல்லை. எனவே தவெகவிற்கு ஆதரவு அளித்தும் அவருக்கு எந்த பயனும் இல்லை. மேலும் எடப்பாடி பழனிசாமியும், தங்கமணியும் சம்பந்தி உறவுமுறையாக உள்ளதால் இருவருக்கும் இடையே சமாதானம் ஏற்பட்டதாகவும், இதனையடுத்தே எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள விவசாயிகளுக்கு ஆதரவான போராட்ட்தில் சேலத்தில் தங்கமணி கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி