Politics
October 07, 2026 04:03 PM
தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.ரகுபதியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு: தள்ளுபடி செய்த சுப்ரீம்கோர்ட்டு
புதுடெல்லி,
தி.மு.க. முன்னாள் அமைச்சர் ரகுபதி வெற்றிக்கு எதிரான வழக்கை சுப்ரீம்கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
திருமயம் தொகுதி
அவரது வெற்றியை எதிர்த்து தவெக வேட்பாளர் சிந்தாமணி, சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி தி.மு.க. எம்.எல்.ஏ. ரகுபதி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், ரகுபதியின் மனுவை ஏற்று த.வெ.க. வேட்பாளர் சிந்தாமணியின் தேர்தல் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டார்.
மனு தள்ளுபடி
இதனை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் பிரசாந்த்குமார் மற்றும் ஸ்ரீசந்திரசேகர் அடங்கிய அமர்வு விசாரணை செய்தநிலையில், அந்த மனுவை இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தொடர்புடைய செய்திகள்
Politics