தமிழ் இளையர் விழா 2026: நிகழ்ச்சிகள் மற்றும் விவரங்கள்
செய்தி: வித்யா வெங்கடேசன்
இளையர்களிடம் தமிழ்ப் புழக்கத்தை அதிகரிக்கவும் தமிழ்ப் பண்பாட்டின்மீதான ஆர்வத்தைத் தூண்டவும் வளர்தமிழ் இயக்கம் தமிழ் இளையர் விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளது.
‘ஈடுபாடு’ எனும் கருப்பொருளை ஒட்டி இவ்வாண்டின் இளையர் விழா நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. செப்டம்பர் 5 முதல் செப்டம்பர் 13 வரை ஒரு வாரத்திற்கு நீடிக்கும் இவ்விழாவில் 11 நிகழ்ச்சிகளை 11 பங்காளி அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ளன.
கலைப் படைப்புகளை வழங்குவதுமுதல் செயற்கை நுண்ணறிவைக் கையாள்வதுவரை, தமிழ்மொழிமீதான பற்றை விதைக்க இளையர்களே சக இளையர்களுக்காகப் பல நிகழ்ச்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சனிக்கிழமை, செப்டம்பர் 5
‘பிஎஸ்எல்இ’ தமிழ்க் கட்டுரைப் பயிலரங்கு
குழுக் கலந்துரையாடல்கள், மனவரைபடங்களை வரைதல், மேலும் பல உத்திகளைக் கொண்டு தமிழ்க் கட்டுரை எழுதுவது எப்படி எனும் சுவாரசியமான பயிலரங்கை ‘இந்தியன் டாட் எஸ்ஜி’ நடத்தவுள்ளது. பங்கேற்பாளர்கள் தங்களுடைய கருத்துகளைத் திறம்பட எழுத்து வடிவில் வெளிப்படுத்தக் கற்றுகொள்வர். இப்பயிலரங்கில் கலந்துகொள்ளும் மாணவர்கள் எழுத்துத் திறன்களைத் தாண்டி, பேச்சாற்றலையும் வளர்த்துக்கொள்ளலாம்.
நேரம்: காலை மணி 10 முதல் நண்பகல் மணி 12.30 வரை
இடம்: ‘பாசிபிலிட்டி’ அறை, தேசிய நூலகக் கட்டடம்
தொடர்புக்கு: kalyan@indian.sg
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
கதைப்போமா - வாங்க பேசலாம்
நேரம்: பிற்பகல் மணி 2 முதல் 3.30 வரை
இடம்: சிங்கப்பூர்க் கலைப்பள்ளி அரங்கம்
தொடர்பு: NHB_TamilLanguageCouncil@nhb.gov.sg
நிகழ்ச்சியில் பங்கேற்க https://go.gov.sg/kathaippoma2026 எனும் மின்படிவம் வழியாக முன்பதிவு செய்யலாம்.
திங்கட்கிழமை - செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 7 - 8
ஐந்து முதல் 11 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் நாடகக் கலையில் ஈடுபடவும் தமிழ்மொழியில் பேசுவதற்கான தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவும் அகம் நாடகக்குழு ‘மோமோவீரன்’ எனும் பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளது. பயிலரங்கின் இறுதியில் அன்பு, தைரியம், ஒற்றுமை போன்ற கருப்பொருள்களை மையமாகக்கொண்டு அவர்கள் ஒரு படைப்பை மேடையேற்றுவர்.
நேரம்: பிற்பகல் மணி 2 முதல் மாலை மணி 6 வரை
இடம்: ஸ்டாப்போர்ட் கலை மையம்
தொடர்பு: partnerships@agam.com.sg
நிகழ்ச்சி குறித்த மேல்விவரங்களுக்கு https://www.agam.com.sg/momoveeran எனும் இணையப்பக்கத்தை நாடலாம்.
வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11
தமிழே அழகே! எழுத்தும் பேச்சும்
பேச்சுத் தமிழில் சரளமாகவும் இயல்பாகவும் பேச ஊக்குவிக்கும் நோக்கில், தமிழ் அருவி ஒரு பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளது. தமிழில் தன்னம்பிக்கையுடன் பேசுவதற்கு ஏதுவான சூழலை ஏற்படுத்தி, களிநயமான நடவடிக்கைகளில் மாணவர்களை ஈடுபடுத்த இப்பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேரம்: காலை மணி 10 முதல் மாலை மணி 5 வரை
இடம்: ‘இமேஜினேஷன்’ அறை, தேசிய நூலகக் கட்டடம்
தொடர்புக்கு: tamilaruviofficial@gmail.com
நிகழ்ச்சியில் பங்கேற்க https://bit.ly/TamilAruvi எனும் மின்படிவம் வழியாக முன்பதிவு செய்யலாம்.
தமிழ்க்குரல் - மெய்யுரு இளையர்
நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியின் இளம்பருவ வளர்ச்சிக்கான தேசியக் கல்விக்கழகம் ‘தமிழ்க்குரல் - மெய்யுரு இளையர்’ எனும் தமிழ்க் குறுநாடகத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. குறைபாடுகள் இன்றி செயல்படுவது, அமைதி, துணிச்சல், இணைய அடையாளம் போன்ற ஒருவரின் தன்னடையாளத்தை மறைக்கும் முகமூடிகளைப் பற்றி இந்த நாடகம் எடுத்துரைக்கும். நாடகத்தின் வெவ்வேறு கட்டங்களில் முகமூடிகளாக இருக்கும் இந்தத் தன்மைகளை விலக்குவதன்மூலம் இளையர்களைத் தன்னம்பிக்கையுடன் செயல்பட அது ஊக்குவிக்கும். அதே நேரம், தன்வெளிப்பாட்டிற்கு தமிழ்மொழி ஒரு சிறந்த கருவி என்பதை உணர்த்தவும் இந்த நாடகம் முனைகிறது.
நேரம்: மாலை மணி 4 முதல் 6 வரை
இடம்: நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி
தொடர்புக்கு: Stella_Nayagam@niec.edu.sg
நிகழ்ச்சியில் பங்கேற்க https://bit.ly/TamilVoice எனும் மின்படிவம் வழியாக முன்பதிவு செய்யலாம்.
சனிக்கிழமை, செப்டம்பர் 12
வரைகதைப் பயிலரங்கு 2026
மின்னிலக்க ஊடகங்கள், செயற்கை நுண்ணறிவின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இயங்குபடக் காணொளிகள், உள்ளடக்கங்களை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலம் இளையர்களிடையே தமிழ்மொழி மீதான ஆர்வத்தைத் தூண்ட ‘கிரியேட்டிவ் ஹேண்டஸ்’ பயிலரங்கு ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது. அத்துடன், மாணவர்கள் புத்தாக்கமிகு வழியில் சிந்திக்கக் கைகொடுக்கும் கற்றல் வளங்களை விரிவுபடுத்துவதையும் இப்பயிலரங்கு நோக்கமாகக் கொண்டுள்ளது.
இடம்: ‘தி பாட்’ அரங்கு, தேசிய நூலகக் கட்டடம்
தொடர்புக்கு: jegan.animation@gmail.com
நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முன்பதிவு தேவையில்லை.
அத்தியாயம்: அகக்கடல் யாத்திரை
ஒரு சொகுசுக் கப்பல், அதில் நிகழும் மர்மங்களை களிநயமான, நகைச்சுவை கலந்த பாணியில் ‘தமிழா’ எனும் இளையர் அமைப்பு நாடகம் ஒன்றை மேடையேற்றவுள்ளது. உறவுகள், அடையாளம், மனிதர்களிடையே உள்ள தொடர்பு ஆகியவற்றைப் பற்றி பார்வையாளர்களின் சிந்தனையைத் தூண்ட இந்த நாடகம் முனைகிறது.
நேரம்: பிற்பகல் மணி 2 முதல் மாலை மணி 4 வரை; இரவு மணி 7 முதல் 9 வரை
இடம்: உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கம்
தொடர்புக்கு: theofficialtamizha@gmail.com
மேல்விவரங்களுக்கும் முன்பதிவிற்கும் https://bookmyshow.sg/en/events/athiyaayam-bon-voyage/TAMIZHA3 எனும் இணையப்பக்கத்தை நாடலாம்.
ரீ-இன்கார்னேஷன் பாட்டுப் பாட வா!
தமிழ்ப் பாரம்பரிய இசைகளை நவீன முறையில் படைத்து, பல தலைமுறைகளை ஒன்றிணைத்து கொண்டாட்ட உணர்வை விதைக்கும் இசைக் கச்சேரிக்கு அக்ஷரா கிரியேஷன்ஸ் ஏற்பாடு செய்துள்ளது. செழுமையான சிங்கப்பூரின் பல்லினச் சமுதாயத்தைப் பறைசாற்றவும் தமிழ்மொழியைக் கண்டு இளையர்கள் பெருமிதம் கொள்ளவும் இந்தக் கச்சேரி விரும்புகிறது.
நேரம்: மாலை மணி 6.30 முதல் இரவு மணி 9.30 வரை
தொடர்புக்கு: contactaksharakreations@gmail.com
நிகழ்ச்சியில் பங்கேற்க https://bit.ly/AksharaKreations எனும் மின்படிவம் வழியாக முன்பதிவு நாடலாம்.
ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 13
கிராமத்துப் பயணம்
ஒரு பாரம்பரியத் தமிழ்ச் சிற்றூரில் இருக்கும் மொழி, மரபு, பழக்கவழக்கங்கள் போன்றவற்றை இளம்பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்த சிறகுகள் ஒரு கற்றல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. தாங்களாகச் செய்து பார்க்கக்கூடிய, களிநயமான நடவடிக்கைகளை இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் எதிர்பார்க்கலாம்.
நேரம்: காலை மணி 10 முதல் பிற்பகல் மணி 3 வரை
இடம்: சிண்டா
தொடர்புக்கு: siragugalsg@gmail.com
நிகழ்ச்சியில் கலந்துகொள்ள https://bit.ly/Siragugal எனும் இணையப்பக்கம் வழியாக முன்பதிவு செய்யலாம்.
கதைத்திருவிழா
வரலாறும் நவீனும் கைகோக்கும் ஒரு கதைசொல்லல் நிகழ்ச்சிக்கு ஏ.கே. தியேட்டர் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. பார்ப்பதையும் கேட்பதையும் மட்டும் உள்வாங்காமல், அடுத்த தலைமுறையினருக்கு அவர்களுடைய பண்பாட்டை எடுத்துச்செல்லும் பாதுகாவலர்களாக உருவாக வேண்டும் என்பதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும்.
நேரம்: மாலை மணி 5 முதல் இரவு மணி 7 வரை
தொடர்புக்கு: Rani@aktcreations.com
நிகழ்ச்சி குறித்த மேல்விவரங்களுக்கு https://www.aktcreations.com/kathaithiruvizha2026 எனும் இணையத்தளத்தை நாடலாம்.
டீ-பொறி பறக்கும்
பாரம்பரியப் பட்டிமன்ற வடிவிலிருந்து விலகி, புதிய பாணியில் காரசாரமான வாதத்திற்கு சிங்கைத் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. நகைச்சுவையும் நவீன காலத்திற்கேற்ற கலந்துரையாடல்களும் இளையர்களிடையே நிகழ்வதை இந்த விவாதத்தில் காணலாம். புதிய திறனாளர்களைக் கண்டறியவும் கலைத் துறையில் ஒருவருக்கொருவர் இடையே தொடர்புகளை வலுப்படுத்தவும் படைப்பாற்றல் மிளிரவும் புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் இந்த விவாதம் விழைகிறது.
இடம்: சிஎஸ்சி டெசன்சன் அரங்கம்
தொடர்புக்கு: singaporetamilsociety@sts.sg
நிகழ்ச்சி குறித்த மேல்விவரங்களுக்கும் முன்பதிவுசெய்யவும் https://bit.ly/TeaPoriParakkum எனும் இணையப்பக்கத்தை நாடலாம்.
வாரம் முழுதும் நடைபெறும் நிகழ்ச்சிகள்
மின்வழித் தமிழ்மொழி! - இன்பத்தமிழ்க் கொண்டாட்டம் 2026 (எடுவில் இணையத்தளம் 24/7)
‘மின்வழித் தமிழ்மொழி’ எனும் நிகழ்ச்சிக்கு ‘எடுவில்’ அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. இணையம் வாயிலாக நடைபெறவிருக்கும் இந்தப் போட்டியில் நாள்முழுதும் மாணவர்கள் கலந்துகொள்ளலாம். விளையாட்டுகள் மூலமாகத் தமிழ்மொழிப் பற்றை மாணவர்களிடையே விதைக்கவேண்டும் என்பதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும்.
தொடர்புக்கு: info@eduville.com
நிகழ்ச்சிக்குப் பதிவுசெய்ய: https://competition.eduville.com
நிகழ்ச்சிகள் குறித்த கூடுதல் விவரங்களுக்கு, வளர்தமிழ் இயக்கத்தின் ஃபேஸ்புக் பக்கத்தை நாடலாம்: facebook.com/tamillanguagecouncilsinsingapore. அல்லது இன்ஸ்டகிராம் தளத்தில் @TamilLangFestival எனும் பயனர் கணக்கை அல்லது www.tamil.org.sg எனும் இணையத்தளத்தை நாடலாம்.