📅 Wednesday, 02 September 2026 IST | ஆவணி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 02, 2026 04:00 PM

தமிழக சட்டசபையில் 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் விஜய்

தமிழக சட்டசபையில் 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் விஜய்

ஆவடி மாநகராட்சியில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் வகையில் ரூ.500 கோடியில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

தமிழ்நாடு சட்டசபையில் வினாக்கள் விடை நேரம் நடைபெற்று வந்தது. இதனிடையே முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

* தமிழ்நாட்டின் நகரக்ஙளில் சுகாதாரமான நகரங்களாக மாற்ற பாதுகாப்பான குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

* வடசென்னை, ஆவடி, பொன்னேரி, மீஞ்சூர் பகுதிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும்.

* சென்னை மீஞ்சூரில் ரூ.4,800 கோடி மதிப்பில் கடல்நீரை குடிநீராக்கம் திட்டம் செயல்படுத்தப்படும்.

* சென்னை கீழ்ப்பாக்கத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய திறன் அதிகரிக்கும் திட்டம் ரூ.400 கோடியில் செயல்படுத்தப்படும்.

* பழமையான 33 குடிநீர் திட்டங்களை சீரமைக்கப்படும்.

* குன்றத்தூர், கூடுவாஞ்சேரி நந்திவரம் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும்.

* ரூ.1000 கோடி செலவில் மதுரை, கடலூர் மாநகராட்சிகளில் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.

* சென்னையில் குடிநீர் மற்றும் கழிவுநீர் அமைப்புகளை ரூ.210 கோடியில் மேம்படுத்தப்படும்.

* நாகர்கோவில் மாநகராட்சியில் விடுபட்ட மற்றும் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும்.

* சென்னை உட்பட அனைத்து நகரப்பகுதிகளின் சாலைகளும் ரூ.1,850 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படும்.

* ரூ.2400 கோடியில் மதுரை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டங்கள் சீரமைக்கப்படும்.

* நெல்லை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் மின்உற்பத்திக்கு ரூ.256 கோடி ஒதுக்கீடு

* பள்ளிகளை சுற்றியுள்ள சாலைகளில் மாணவ, மாணவிகள் நடந்து செல்ல பிரத்யேக நடைபாதை உருவாக்கப்படும்.

* மாநிலம் முழுவதும் ரூ.305 கோடி செலவில் பூங்காக்கள் அமைக்கப்படும்.

* ரூ.335 கோடி செலவில் அரசு பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்படும்.