📅 Friday, 28 August 2026 IST | ஆவணி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 28, 2026 01:00 AM

தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் அதிகம்: கிட்டத்தட்ட 10 மணி நேரம் அவை நடைபெற்று சாதனை

தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் அதிகம்: கிட்டத்தட்ட 10 மணி நேரம் அவை நடைபெற்று சாதனை

தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில், இதுவரை இல்லாத வகையில், ஒரே நாளில் சுமார் 10 மணி நேரம் தொடர்ச்சியாக அவை அலுவல்கள் நடைபெற்றுள்ளன.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஆகஸ்ட் 27) பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், சமூகநீதித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

அமைச்சர்களுடன் அமர்ந்த முதலமைச்சர்:

வழக்கம்போல், இன்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. சட்டப்பேரவையில் காலையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜூனா, என். ஆனந்த், வெங்கட்ரமணன், நிர்மல்குமார், அ.தி.மு.க. பொது செயலர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மாலை வேளையில் சட்டப்பேரவைக்கு வந்த முதலமைச்சர் விஜய் அவரும் சிறிது நேரம் கலந்துகொண்டார். சட்டப்பேரவையில் முதல்வருக்கென தனியாக பிரத்யேக இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. எனினும், இன்றைய சட்டப்பேரவையில் முதல்வருக்கான பிரத்யேக இருக்கையை தவிர்த்துவிட்டு, அமைச்சர்களுக்கான முன்வரிசை இருக்கையில் முதல்வர் விஜய் அமர்ந்தார்.

சுமார் 10 மணி நேரம்:

மானிய கோரிக்கை விவாதத்தை கடந்து, பல்வேறு விவாதங்கள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து, இன்றைய சட்டப்பேரவையில் பல்வேறு விவாதங்கள் நடந்ததால், நேற்று முன்தினம் (ஆகஸ்ட். 25) போலவே சட்ட பேரவைக்கூட்டம் இரவு 7 மணியையும் கடந்து தொடர்ந்தது. அதன்பின், அமைச்சர்களின் பதிலுரை ஏதும் இல்லாமலேயே இரவு 7.20 மணியளவில் அவை நிறைவடைந்தது.

எம்.எல்.ஏ.க்கள் பலரையும் கேள்விகள் கேட்க அனுமதிப்பதை அடுத்து அவை நடைபெறும் நேரம் கடந்த சில நாள்களாக மாலை 6 மணியை தாண்டி நடைபெற்று வந்தது. இன்று மட்டும் அதிகபட்சமாக சட்டப்பேரவை சுமார் 9 மணி நேரம் 50 நிமிடங்கள் நடைபெற்றுள்ளது.