📅 Saturday, 29 August 2026 IST | ஆவணி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 29, 2026 06:01 PM

தமிழக கவர்னராக கிரண் ரெட்டி நியமனம்?

தமிழக கவர்னராக கிரண் ரெட்டி நியமனம்?

நமது நிருபர்

கேரள கவர்னராக இருக்கும் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர், கடந்த மார்ச் முதல் தமிழக கவர்னர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வருகிறார். இந்நிலையில் தமிழக கவர்னராக, ஆந்திரா முன்னாள் முதல்வர் கிரண்குமார் ரெட்டி நியமிக்கப்பட வாய்ப்புள்ளது என டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

யார் இந்த கிரண் ரெட்டி?

முன்னாள் முதல்வர் நல்லாரி கிரண் குமார் ரெட்டியுடன் முதல்வர் விஜய்க்கு நெருங்கிய தொடர்பு இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. விஜய்யை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பக்கம் கொண்டுவரும் முயற்சிகளின் ஒரு பகுதியாகவே கிரண் குமார் ரெட்டி கவர்னராக நியமிக்கப்பட இருக்கிறார். இவரது நீண்டகால அரசியல் அனுபவம் மற்றும் ஒருங்கிணைந்த மாநிலத்தில் சபாநாயகராகவும், முதல்வராகவும் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டு, கவர்னர் பதவிக்குத் தேர்ந்தெடுப்பதற்கான அதிக வாய்ப்பு உள்ளது. தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம் குறித்து அறிவிப்பு எப்பொழுது வேண்டுமானாலும் வெளியாகலாம் என தகவல் வெளியாகி உள்ளது.