📅 Tuesday, 25 August 2026 IST | ஆவணி 9, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 24, 2026 05:00 PM

தமிழ்நாட்டில் சர்க்கரை விலை மேலும் உயர்வு

தமிழ்நாட்டில் சர்க்கரை விலை மேலும் உயர்வு

தமிழ்நாட்டில் சர்க்கரை விலை மேலும் உயர்ந்து கிலோ ரூ.72-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பண்டிகை காலம்

தமிழ்நாட்டில் வரலாறு காணாத அளவிற்கு சர்க்கரை விலை உயர்ந்து வருகிறது. அதாவது கடந்த மாதம் கிலோ ரூ.45-க்கு விற்பனை செய்யப்பட்ட சர்க்கரை விலை கிடுகிடுவென உயர்ந்து கடந்த 20-ந்தேதி ஒரு கிலோ சர்க்கரை ரூ.67-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், ஓணம் பண்டிகை, விநாயகர் சதுர்த்தி. ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வரவுள்ளதால் சர்க்கரையின் தேவை அதிகரித்துள்ளது.

இ-20 பெட்ரோல்

எது எப்படியாக இருந்தாலும் சர்க்கரைத் தேவை அதிகரிப்பு காரணமாக விலை உயர்ந்து வருவதால் மராட்டிய மாநிலத்தில் உள்ள சர்க்கரை ஆலை உரிமையாளர்கள் சர்க்கரைப் பதுக்கலில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற பல்வேறு காரணங்களுக்காக தமிழ்நாட்டில் சர்க்கரை விலை மேலும் உயர்ந்துள்ளது. அதன்படி நேற்று தமிழ்நாட்டில் சர்க்கரை ஒரு கிலோ ரூ.72 விற்பனை ஆனது. சர்க்கரை விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.