Business
August 25, 2026 03:04 AM
தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு
சென்னை: ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்தது.
சர்வதேச நிலவரங்களால் தமிழகத்தில் தங்கம் விலை அதிகரித்து வருகிறது. கடந்த சனிக்கிழமை, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 14,950 ரூபாய்க்கும், சவரன் 1,19,600 ரூபாய்க்கும் விற்பனையானது.
வெள்ளி கிராம், 270 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று, தங்கம் விலை கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து, 15,030 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்து, 1,20,240 ரூபாய்க்கு விற்கப்பட்டது .
இதையடுத்து, நீண்ட நாட்களுக்கு பின், தங்கம் கிராம் 15,000 ரூபாயையும், சவரன் 1.20 லட்சம் ரூபாயையும் தாண்டியுள்ளது.
வெள்ளி கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, 275 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு 5,000 ரூபாய் அதிகரித்து, 2.75 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
Business