ஆண்டுக்கு ரூ.270 கோடி நஷ்டத்தில் ஆவின்
சென்னை: அ.தி.மு.க., - பழனிசாமி: கால்நடைகளின் தீவனங்கள் விலையும், பராமரிப்பு செலவும் அதிகரித்துள்ளது. அரசு அறிவித்த கொள்முதல் விலை போதாது என, பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒரு லிட்டர் பசும் பாலுக்கு 50 ரூபாயும், எருமை பாலுக்கு 60 ரூபாயும் கொள்முதல் விலையாக வழங்க வேண்டும்.
அமைச்சர் விஜயலட்சுமி: தி.மு.க., ஆட்சியில், 2021ம் ஆண்டு ஆவின் பால் விலை, லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைக்கப்பட்டது. இதனால், ஆவினுக்கு ஆண்டுதோறும் 270 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.
விலை குறைப்பால் ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்யவும், பால் கொள்முதல் மற்றும் விற்பனையை அதிகரிக்கவும் எந்த முயற்சியும் எடுக்காமல், தி.மு.க., அரசு மெத்தனப்போக்கில் செயல்பட்டது.
இதனால் ஆவின், கூடுதல் நிதிச் சுமையை எதிர்கொண்டு வருகிறது. தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்று, இரண்டு ஆண்டுகளுக்கு பின், பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டது.
இந்த அரசு பொறுப்பேற்ற மூன்றே மாதத்தில், பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. பால் கொள்முதல் விலையை, 44 ரூபாயாக உயர்த்த, முதல்வருடன் ஆலோசிக்கப்படும்.