📅 Thursday, 10 September 2026 IST | ஆவணி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News September 10, 2026 12:33 AM

தொடரும் பதற்றம்; ஈரான் எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல்..!!

தொடரும் பதற்றம்; ஈரான் எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல்..!!

தொடரும் பதற்றம்; ஈரான் எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல்..!!

மேற்காசியாவில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க ராணுவம் அதிரடித் தாக்குதலை நடத்தி வருகிறது.

தற்போது மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க படைகள் ஈரான் கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற கப்பல்கள் அழிக்கப்படும் செயற்கைக்கோள் வீடியோவை வெளியிட்டுள்ளது.

கார்க் தீவு அருகே 5 ஈரான் எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.

இது குறித்து அமெரிக்கப்படை மத்திய தலைமையகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த இரண்டு நாட்களில், ஈரான் படை அமெரிக்கக் கடற்படைக் கப்பல் ஒன்றை இருமுறை பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் குறிவைத்து தாக்குதல் நடத்த முயன்றது.

இதனால் ஈரானின் 5 கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்களை அமெரிக்கப் படைகள் அழித்தன. ஈரானின் தாக்குதல் முயற்சிகளிலிருந்து அமெரிக்கக் கப்பல் வெற்றிகரமாகத் தப்பித்து. அப்பகுதியில் தொடர்ந்து ரோந்துப் பணியை மேற்கொண்டது.

இதில் அமெரிக்கப் படையினர் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை' என்று தெரிவித்துள்ளது. இதற்கிடையே அமெரிக்கத் தாக்குதல்களை தொடர்ந்து, ஜோர்டானில் உள்ள அமெரிக்க இலக்குகளை நோக்கி ஈரான் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தி இருக்கிறது.

இதனால் மேற்காசியாவில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.