📅 Tuesday, 01 September 2026 IST | ஆவணி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 01, 2026 12:04 PM

“தவெக எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் யாரும் சாராய தொழிலில் ஈடுபட மாட்டோம்”

“தவெக எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் யாரும் சாராய தொழிலில் ஈடுபட மாட்டோம்”

“தவெக எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் யாரும் சாராய தொழிலில் ஈடுபட மாட்டோம்” - ஆதவ் அர்ஜூனா

சினிமா மற்றும் டாஸ்மாக் துறைகளில் ஊழல் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா குற்றஞ்சாட்டிய நிலையில், அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

அதன்பின் பேரவையில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, “மக்களால் கொடுக்கப்பட்ட அதிகாரமானது சாராய நிறுவனங்களைத் தொடங்க லைசென்ஸாக மாற்றப்பட்டுள்ளது. அதுதான் ஊழல் என்கிறோம். மதுவை ஒரே நாளில் சைன் போட்டு க்ளோஸ் பண்ண முடியும். ஆனால், குடிநோயாளிகளை நாம் உருவாக்கி இருக்கிறோம். தவெக சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் யாரும் சாராய தொழிலில் ஈடுபட மாட்டோம். மதுரை மாநகராட்சி ஒட்டுமொத்தமாகவே ஊழலில் ஊறிப்போயிருந்தது. மதுரையில் மட்டுமல்ல, அனைத்து மாநகராட்சிகளிலும் ஊழல் நிறைந்துள்ளது. எந்தெந்த மாநகராட்சிகளில் ஊழல் நடைபெறுகிறது என்பதை விரைவில் நாங்கள் வெளிப்படுத்துவோம்.

சமூகநீதிக்காக கலைஞர் தனது இறுதி மூச்சு வரை பாடுபட்டார். இந்தியாவிலேயே அதிகமான 69% இட ஒதுக்கீட்டை தமிழ்நாட்டில் உருவாக்கி கொடுத்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான். தமிழ்நாட்டின் 69% இடஒதுக்கீடு கொள்கையை ஜெயலலிதா தனது சட்டப்போராட்டத்தின் மூலம் பாதுகாத்தார். உள்ளாட்சித் தேர்தலுக்கு 6,7 மாதங்கள் உள்ளன. உள்ளாட்சித் தேர்தலிலும் தவெக வெற்றி பெறும். நேபாள நிலச்சரிவு பேரிடரில் சிக்கிய தமிழகத்தைச் சேர்ந்த 304 பேரில் 220 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சிய 84 பேரை இன்னும் தொடர்பு கொள்ள முடியவில்லை” என்றார்.