தவெக நெல்லிக்காய் மூட்டை போன்றது; சிதறிபோய்விடும் என எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்!
தவெக நெல்லிக்காய் மூட்டை போன்றது; சிதறிபோய்விடும் என எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்!
மதுராந்தகம்: மதுராந்தகம் அதிமுக வேட்பாளர் கனிதாசம்பத்தை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொன்டார். அப்போது பேசியதாவது; குதிரை பேரத்தில் விலை போய்விட்டதால் மதுராந்தகத்தில் இடைத்தேர்தல் திணிக்கப்பட்டுள்ளது. ஓட்டுப்போட்ட மக்களை மறந்து தவெகவில் சேர்ந்தவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்.
அதிமுகவில் வெற்றி பெற்றவர்களை ராஜினாமா செய்யவைத்து தவெகவில் சேர்த்தது வெட்கக்கேடு, இழிவான செயலில் ஈடுபட்டது, தமிழக வெற்றிக் கழகம் என எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டியுள்ளார். ராஜினாமா பரிசீலனையில் உள்ளபோது மாற்று கட்சியில் சேருவது சட்டவிரோதம், மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் டெபாசிட் இழக்க வேண்டும். கரூர் சம்பவம் நடந்து 72 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே வராதவர் முதல்வர் விஜய், தன்னைப் பார்க்க வந்தவர்களை கைவிட்டவர் விஜய்; நீங்களா மக்களை காப்பற்றப் போகிறீர்கள். கரூர் கூட்ட நெரிசல் விஜய் பேச்சை கேட்க வந்த 41பேர் உயிரிழந்தனர்.
கரூர் சம்பவத்தின்போது இன்று பேசும் தவெக ஜாம்பவான்கள் எங்கே போய் ஒளிந்து கொண்டார்கள். தவெக 2ம் கட்டத் தலைவர்கள் துண்டக் காணோம், துணியைக் காணோம் என ஒளிந்துகொண்டனர். இறந்தவர்கள் குடும்பத்தை சென்னைக்கு அழைத்துச் ஆறுதல் சொல்லும் காட்சிதான் தவெக. ரிலிஸும் ரிலுதான் தவெகவின் மூலதனம். தவெக நெல்லிக்காய் மூட்டை போன்றது; சிதறிபோய்விடும். எங்கள் வேட்பாளர்களை விலைக்கு வாங்கி தவெக வேட்பாளர்களாக நிறுத்தி உள்ளது தவெக என எடப்பாடி விமர்சனம் செய்துள்ளார்.