📅 Wednesday, 26 August 2026 IST | ஆவணி 10, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 26, 2026 10:00 AM

Toxic X Review: டாக்ஸிக் படம் எப்படி இருக்கு?.. தாறுமாறா? தக்காளி சோறா?.. ட்விட்டர் விமர்சனம்!

Toxic X Review: டாக்ஸிக் படம் எப்படி இருக்கு?.. தாறுமாறா? தக்காளி சோறா?.. ட்விட்டர் விமர்சனம்!

சென்னை: கீது மோகன்தாஸ் தன்னை நம்பி இப்படியொரு பெரிய படத்தை இயக்க வாய்ப்புக் கொடுத்தது யஷ் மட்டும் தான் என சென்னையில் ரொம்பவே உருக்கமாக பேசியிருந்தார். நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, ருக்மணி வசந்த், தாரா சுதாரியா என ஏகப்பட்ட ஹீரோயின்களை களத்தில் இறக்கி அப்பா, மகன் என யஷ்ஷுக்கு டபுள் ரோல் கொடுத்து மெகா பட்ஜெட்டில் உருவாக்கியுள்ள டாக்ஸிக் திரைப்படம் இறுதியாக இன்று வெளியானது.

டிரைலரை பார்த்த ரசிகர்கள் என்னடா இது கோட் மூவியா? எனக் கேட்க ஆரம்பித்தனர். அதெல்லாம் கிடையாது, இது ஹாலிவுட் லெவல் படம் என படக்குழு தொடர்ந்து சொல்லி வந்த நிலையில், இன்று காலையில் பல இடங்களில் திரைப்படம் வெளியான நிலையில், படத்தை பார்த்த ரசிகர்கள் படத்தை தாறுமாறு என கொண்டாடி வருகின்றனரா? அல்லது இது பிரியாணி இல்லை வெறும் தக்காளி சோறு தான் என அடித்து நொறுக்குகிறார்களா என்பது குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க..

யஷ் என்ட்ரி ஃபயர்: டாக்ஸிக் படத்தில் யஷ் என்ட்ரி சீனே தியேட்டர் தெறிக்குது என்றும் செம ஃபயர் என இந்த ரசிகர் ஃபயர் விட்டுள்ளார். சில சண்டைக் காட்சிகள் சிறப்பாக உள்ளது. ஒளிப்பதிவு ஹாலிவுட் தரத்தில் அருமையாகவே உள்ளது. ஆனால், முதல் பாதியில் பல இடங்களில் லேக் பயங்கரமாக அடிக்கிறது. பெரிதாக இந்த படம் தன்னை கவரவில்லை என பதிவிட்டுள்ளார்.

Loud and Empty: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான டாக்ஸிக் திரைப்படம் குறை குடம் கூத்தாடும் என்கிற வகையிலேயே ரொம்ப சத்தமாக இருக்கிறது. ஆனால், முதல் பாதியில் கதை பெரிதாக இல்லை. இரண்டாவது பாதியில் இதையெல்லாம் இயக்குநர் கீது மோகன்தாஸ் சரி செய்தால் தான் படம் தப்பிக்கும் என இந்த ரசிகர் பதிவிட்டுள்ளார்.

பிளாக்பஸ்டர்: முதல் பாதி முழுவதுமே டாக்ஸிக் உலகத்திற்குள் ரசிகர்களை அழைத்து வருவது தான். ஆனால், 2வது பாதியில் யஷ் மற்றும் யஷ் இடையே நடக்கும் சண்டைக் காட்சிகளும், மோதல்களும் தான் படத்தின் ஹைலைட். இந்த படம் யஷ்ஷுக்கு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படம் தான் என இந்த ரசிகர் முதல் பாதியை விட 2வது பாதி சூப்பர் என விமர்சித்துள்ளார்.

எமோஷனல் கனெக்ட் மிஸ்ஸிங்: டாக்ஸிக் படத்தை அதிகாலையிலேயே பார்த்துவிட்ட கிறிஸ்டோபர் கனகராஜ், "அல்ட்ரா ஸ்டைலிஷ் ஆக இருக்கும் யஷ் மற்றும் செம காஸ்ட்லியான புரொடக்‌ஷன் வேல்யூ படத்துக்கு மிகப்பெரிய பிளஸ். சர்க்கஸ் சண்டைக் காட்சி வேறலெவல். படத்தில் கிளாமர், வயலென்ஸ் என ஏகப்பட்ட விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால், சரியான கேரக்டர் இன்ட்ரோ யாருக்குமே இல்லாதது மைனஸ். முக்கியமாக எமோஷனல் கனெக்ட் சுத்தமாக மிஸ்ஸிங் என்றும் டாக்ஸிக் டார்ச்சர் என்றும் பதிவிட்டுள்ளார்.

யஷ்ஷோட 4 வருஷ உழைப்பு வீண்: கீது மோகன்தாஸ் என்னம்மா பண்ணி வச்சிருக்க, யஷ்ஷோட பணமும் 4 வருஷ பிரைம் டைமும் சுத்தமா வேஸ்ட் என ரசிகர்கள் டாக்ஸிக் படத்தை பார்த்து கொந்தளித்து வருகின்றனர். இதன் காரணமாகவே துரந்தர் 2வுடன் டாக்ஸிக் படத்தை வெளியிடவில்லையா என்கிற கேள்விகளும், இயக்குநர் படத்தை சுத்தமாக கெடுத்து விட்டார். யஷ் ஒவ்வொரு காட்சியிலும் உயிரைக் கொடுத்து நடித்தும் படம் கனெக்ட் ஆகவில்லை என்கின்றனர்.