உணவுத்துறை தொழில்முனைவோரை ஊக்குவிக்கு ‘Foodprenuer Growth Summit’
புதிய தலைமுறையைச் சேர்ந்த உணவு தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் 'ஃபுட்பிரனர் குரோத் சம்மிட் 2026' (Foodprenuer Growth Summit 2026) சென்னையில் ஐஐடிஎம் ரிசர்ச் பார்க்கில் வரும் அக்டோபர் 10 மற்றும் 11 ம் தேதி நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில், 800க்கும் மேலான உணவு தொழில்முனைவோர், ரெஸ்டாரண்ட் உரிமையாளர்கள், வர்த்தக ஆர்வலர்கள், வல்லுனர்கள் பங்கேற்கின்றனர். யுவர்ஸ்டோரி தமிழ் இந்நிகழ்ச்சியின் ஊடக பங்குதாரராக விளங்குகிறது.
இந்தியா முழுவதும் ஆயிரக்கணகான தொழில்முனைவோர் வேகமாக வளரும் உணவு துறையில் வாய்ப்புகளை எதிர்நோக்குகின்றனர். ஆனால், உணவு தொழில் மீதான ஆர்வத்தை வர்த்தகமாக வளர்த்தெடுக்க எண்ணத்தை கடந்து, சரியான தகவல்கள், திட்டமிடல், செயலாக்கம் தேவை. இதற்கான மேடையாக 'ஃபுட்பிரனர் குரோத் சம்மிட் 2026' நடைபெறுகிறது.
ஃபுட்பிரனர் குரோத் சம்மிட் 2026, வெற்றிகரமான தொழில்முனைவோரின் நடைமுறை அறிவு, தொழில் வல்லுனர்கள் அனுபவம் மற்றும் சூழல் பங்குதாரர்கள் ஆகியோரை ஒன்றிணைக்கிறது.
கீழ் கண்ட பலன்களை இந்த மாநாடு வழங்குகிறது:
• சரியான உணவு வர்த்தக வாய்ப்பை கண்டறிதல்
• வர்த்தக வெற்றியில் அமைவிடத்தின் பங்கு
• லாபகரமான மெனுவை உருவாக்கி, செலவுகளை நிர்வகிப்பது
• அமைப்புகள், SOPs மற்றும் செயல்முறை
• உணவு பிராண்டை வளர்த்தெடுப்பது
• ஒற்றை நிலையத்தை பெரிய வர்த்தகமாக உருவாக்குவது
இந்த மாநாட்டில் 800க்கும் மேலான உணவு தொழில்முனைவோர், ரெஸ்டாரண்ட் உரிமையாளர்கள், வர்த்தக ஆர்வலர்கள், வல்லுனர்கள் பங்கேற்கின்றனர். தொழில்முனைவோர் ஐடியாக்களை பரிமாறிக்கொள்ள, தொடர்புகளை உருவாக்கி கொள்ள, நேரடி அனுபவம் பெற இந்த மாநாடு வழிவகுக்கும்.
மேலும், 500க்கும் மேலான உணவுத்துறை வெண்டர்கள், சேவை அளிப்பவர்கள் தங்கள் சேவைகள் , தொழில்நுட்பத்தை காட்சிப்படுத்த உள்ளனர்.
நேச்சுரல்ஸ் சலூன் அண்ட் ஸ்பா இணை நிறுவனர் சி.கே.குமாரவேல், கேக் ஸ்கொயர் நிறுவனர் ஜானகி மாயா, மன்னா மெஸ் நிறுவனர் ஜெயராஜ், ஆலடிபட்டியான் கருப்பட்டி காபி நிறுவனர் மோசச் தர்மா பாலன் உள்ளிட்ட முன்னணி தொழில்முனைவோர்களிடம் இருந்து அனுபவ பாடம் கற்கும் வாய்ப்பை பெறலாம்.
இந்த மாநாட்டின் ஊடக பங்குதாரராக யுவர்ஸ்டோரி தமிழ் விளங்குகிறது.
Foodprenuer Growth Summit 2026 முழு விவரம்