வீட்டுக்குள்ள சீக்ரெட் ரூமா? நீச்சல் குளம் முதல் கிளாஸி பாத்ரூம் வரை... பிக் பாஸ் 10 ஹோம் டூர்!
சென்னை: சின்னத்திரை ரசிகர்களின் ஆல்-டைம் ஃபேவரிட் நிகழ்ச்சியான 'பிக் பாஸ் தமிழ் சீசன் 10' வரும் செப்டம்பர் 6-ஆம் தேதி மிகப்பிரம்மாண்டமாகத் தொடங்கவுள்ளது. ஒவ்வொரு சீசன் தொடங்கும்போதும் பிக் பாஸ் வீடு எப்படி இருக்கும், ஜெயில் இருக்கிறதா, நீச்சல் குளம் மற்றும் கார்டன் ஏரியா டிசைன் என்ன என்ற ஆர்வம் ரசிகர்களிடம் தொற்றிக்கொள்வது வழக்கம். அந்த வகையில், தற்போது 'பிக் பாஸ் சீசன் 10' வீட்டின் பிரம்மாண்டமான ஹோம் டூர் விவரங்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி சோஷியல் மீடியாவில் அனல் பறக்கவிட்டு வருகின்றன.
கிரீன் தீம் & 10 பெட்கள்: கடந்த சீசன்களை விட இந்த முறை வீட்டிற்குள் பசுமையான சூழலை உருவாக்கும் வகையில் பச்சை நிற அலங்காரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. கார்டன் ஏரியா, ஸ்விம்மிங் பூல், டைனிங் ஏரியா மற்றும் டாஸ்க் நடக்கும் இடங்கள் அனைத்தும் கண்ணை பறிக்கும் வண்ணங்களில் நேர்த்தியாகச் செதுக்கப்பட்டுள்ளன.
படுக்கையறை அமைப்புகள்: வழக்கம் போல் கேப்டனுக்குத் தனி ராஜபோக அறை ஒதுக்கப்பட்டுள்ளது. மெயின் படுக்கையறையில் மொத்தம் 10 மெத்தைகள் உள்ளன. இதில் 8 மெத்தைகளை இருவர் பகிர்ந்துகொள்ளும் வகையிலும் (Double Beds), 2 மெத்தைகள் தனியாக பயன்படுத்தும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளன. ஆடம்பர பாத்ரூம்: பிளாக் அண்ட் வொயிட் டைல்ஸ்கள் மற்றும் விலைமதிப்பற்ற வேலைப்பாடுகளுடன் குளியலறை பகுதி 'கிளாஸி' லுக்கில் தயார் செய்யப்பட்டுள்ளது. 3 பாத்ரூம் மற்றும் ஒரு உடை மாற்றும் அறை உள்ளது. 20 மேலுக்கு 3 பாத்ரூம் மட்டுமே உள்ளதால், இந்த முறையும் பாத்ரூமுக்கு நிச்சயம் சண்டை நடக்கும்.
கன்ஃபெஷன் ரூம்: இந்த சீசன் பிக் பாஸ் வீட்டின் மிகப்பெரிய மாஸ் ஹைலைட்டே கன்ஃபெஷன் ரூம். போட்டியாளர்கள் தங்களது புலம்பல்கள், புகார்கள் மற்றும் நாமினேஷன்களைப் பதிவு செய்யும் கன்ஃபெஷன் அறை அருகில், இந்த சீசனில் பொதுமக்களும் போட்டியாளர்களாகக் களம் இறங்குவதைக் கௌரவிக்கும் வகையில் பிரம்மாண்டமான 'Common Man' சிலை ஒன்று நிறுவி அசத்தியுள்ளனர்.
'சீக்ரெட் ரூம்' சஸ்பென்ஸ்: இந்த 10-வது சீசனில் பிக் பாஸ் வீட்டிற்குள் ஒரு ரகசிய அறை (Secret Room) அமைக்கப்பட்டுள்ளது. அந்த அறைக்குள் என்ன இருக்கிறது? அது எதற்காக பயன்பட போகிறது? என்ற தகவலை பிக் பாஸ் டீம் செம சீக்ரெட்டாக பூட்டி வைத்துள்ளது. வரும் செப்டம்பர் 6ஆம் தேதி அரங்கேறும் பிரம்மாண்ட தொடக்க விழாவில், தொகுப்பாளர் விஜய் சேதுபதி இந்தச் சீக்ரெட் ரூம் ரகசியத்தை உடைப்பார் எனத் தெரிகிறது. தற்போது வெளியாகியுள்ள இந்த ஹோம் டூர் ஸ்டில்களே ரசிகர்களின் எதிர்பார்ப்பை விண்ணைத் தொட வைத்துள்ளது.