வீடுகளில் பூஜை செய்து வழிபட களிமண் விநாயகர் சிலைகள் தயார்
வீடுகளில் பூஜை செய்து வழிபட களிமண் விநாயகர் சிலைகள் தயார்
திருத்தணி: விநாயகர் சதுர்த்தி விழாவை நாடு முழுவதும் திங்கட்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, பொது இடங்களில் வைத்து பூஜைகள் செய்ய பெரிய அளவில் வண்ண உருவங்களில் விநாயகர் சிலைகள் இயற்கையாக தண்ணீரில் கரையும் வகையில் பேப்பர், மாவு, கூழ், அட்டை, வாட்டர் பெயின்ட் போன்ற பொருட்களால் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வீடுகளில் பெண்கள் விநாயகர் சதுர்த்தியை வெகு விமரிசையாக கொண்டாடுவது வழக்கம்.
அனைத்து வீடுகளிலும் இயற்கையான களிமண் விநாயகர் சிலைகள் வைத்து பூஜைகள் செய்து நீர்நிலைகளில் கரைப்பார்கள். இதற்காக, திருத்தணியில் பெரியார் நகர் பகுதி, தெக்களூர், சூரியநகரம், புச்சிரெட்டிப்பள்ளி, பொதட்டூர்பேட்டை, சவுட்டூர், பள்ளிப்பட்டு, அத்திமாஞ்சேரிபேட்டை, ஆர்.கே.பேட்டை, கே.ஜி.கண்டிகை சுற்று வட்டார பகுதிகளில் மண்பாண்ட தொழிலாளர்கள் கடந்த சில நாட்களாக களிமண் விநாயகர் சிலைகள் தயாரிப்பில் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர்.