📅 Sunday, 09 August 2026 IST | ஆடி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 07, 2026 10:34 PM

விஜய்

விஜய்

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: விவாகரத்து மனுவை வாபஸ் பெற்றார் சங்கீதா என செய்தி

தமிழக முதலமைச்சரும் நடிகருமான விஜய்க்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட விவாகரத்து வழக்கில் மிக முக்கியத் திருப்பமாக, தனது மனுவை வாபஸ் பெறுவதாக அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணை நிறைவில் இந்த முடிவை அறிவித்ததாக தந்தி டிவி செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி சங்கீதா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணை இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, லண்டனில் இருந்து காணொளி காட்சி மூலமாக சங்கீதா ஆஜரானார். அப்போது, கணவர் விஜய்யுடன் நிலவி வந்த பிரச்சனை தொடர்பான விவாகரத்து மனுவை வாபஸ் பெற்றுக்கொள்வதாக நீதிபதியிடம் அவர் நேரில் தெரிவித்தார்.

முனுதாரரான சங்கீதா, தாம் இந்த விவாகரத்து வழக்கை மேற்கொண்டு தொடர விரும்பவில்லை என்று நீதிபதியிடம் தெரிவித்ததாக செய்திகள் கூறுகின்றன.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிமன்றம், மனுவை வாபஸ் பெற அனுமதித்து வழக்கைத் தள்ளுபடி செய்தது. மேலும், எதிர்காலத்தில் தேவைப்பட்டால் புதிய மனு தாக்கல் செய்வதற்கான சட்ட உரிமையையும் அவருக்கு நீதிமன்றம் வழங்கியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், திருமண உறவில் ஏற்பட்ட விரிசல் மற்றும் கருத்து வேறுபாடுகள் காரணமாக தமக்கு கடுமையான மன உளைச்சலும் பொதுவெளியில் சங்கடமும் ஏற்பட்டதாகச் சங்கீதா குறிப்பிட்டிருந்தார்.

மேலும், ஜீவனாம்சம் மற்றும் நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வசிப்பதற்கான உரிமை ஆகியவற்றையும் அவர் கோரியிருந்தார்.

விசாரணையின் போது, மனுவைத் திரும்பப் பெறுவதற்கு விஜய் தரப்பு வழக்கறிஞர் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து, மனுதாரரின் கோரிக்கையை ஏற்று வழக்கை முடித்துவைப்பதாகச் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 1999-ஆம் ஆண்டு சிறப்புத் திருமண சட்டத்தின் கீழ் விருப்பத் திருமணம் செய்துகொண்ட இத்தம்பதியினருக்கு ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா என்ற இரு பிள்ளைகள் உள்ளனர்.

கடந்த சில மாதங்களாகத் தமிழக அரசியல் மற்றும் திரைத்துறையில் பெரும் விவாத பொருளாக இருந்த இந்த விவகாரம், தற்போது சங்கீதா மனுவை வாபஸ் பெற்றதன் மூலம் சட்டப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது.