விஜய் ஒரு Funny man..! நடிகர் என்பதால் சட்டமன்றத்தில் அவருக்கு தெரிந்ததை செய்கிறார்...
விஜய் ஒரு Funny man..! நடிகர் என்பதால் சட்டமன்றத்தில் அவருக்கு தெரிந்ததை செய்கிறார்...
சென்னை: முதல்வர் விஜய் பதவி ஏற்றதில் இருந்தே அவரது உடல்மொழி மற்றும் பேச்சு தேர்தல் பிரச்சாரத்தின் போது இருந்ததை விட மோசமான நிலைக்கு சென்றுள்ளதை அனைவரும் அறிவர். பொது கூட்டங்கள் மற்றும் தெரு கூட்டங்களில் பேச வேண்டியதையெல்லாம் எடுத்து வந்து, மக்கள் பிரச்சனைகளை பேச வேண்டிய சட்டமன்றத்தில் பஞ்ச் டயலாக்ஸ் மற்றும் மனித மாண்பே இல்லாத மோசமான உடல் மொழியுடன் பேசி வருகிறார்.
இது பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் தவெக அரசுக்கு ஆதரவளிக்கும் கட்சிகள் என பல்வேறு தரப்பினர் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே திமுக மூத்த தலைவரும், கட்சியின் முக்கிய செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான டிகேஎஸ் இளங்கோவன் முதல்வர் விஜய்யின் மோசமான செயல்பாடுகளை விமர்சித்து உள்ளார்.
இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், " முதல்வர் விஜய் அடிப்படையில் ஒரு நடிகர்; அரசியல் பயின்றவர் அல்ல. ஏதோ ஒரு வகையில், ஒரு 'விசில்' காரணமாக அவர் ஆட்சிக்கு வந்துவிட்டார். முறையாக அரசியல் தெரியாதவர அதுவும் ஒரு நடிகர் என்ன செய்வார்..?
அரசியல் தெரியாமல் முதல்வரான அவர் சட்டமன்றம் வந்தால் என்ன செய்வார்; அவருக்கு தெரிந்ததை தானே செய்ய முடியும். அதனால் தான் அவர் சட்டமன்றத்தில் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்துகிறார். முதல்வர் பதவியில் அமர்ந்து விட்ட பிறகும் கூட, தனக்கு வாக்களித்த தமிழக மக்களைக் காக்க வேண்டிய பொறுப்புள்ள ஒரு பதவியில் இருக்கிறோம் என்ற உணர்வு அவருக்கு இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.
ஒரு முதல்வராக அவர் தமிழக மக்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். ஆனால் அவர் அதை ஒருபோதும் செய்வதில்லை. இதுவரை திமுக-வைத் தாக்குவது மட்டுமே அவரது வேலையாக இருக்கிறது... வேடிக்கையான மனிதர்," என்று விமர்சித்து உள்ளார்.